வை.பு.இ.இதிகாச பாகவதம்
இன்னும் பல காட்சிகள்;மருதிடைத் தவழ்கின்றான். மலரவன் கவர்ந்த சிறார்களையும் கன்றுகளையும் மீட்கின்றான். காளிங்கன் மீது நடனம் ஆடுகின்றான். வேய்ங்குழல் இசைக்கின்றான்.[1] கோவர்த்தனகிரி எடுக்கின்றான்.[2] கோபியரை மணிக்கின்றான். ஆசிரியரான சாந்தீபினி முனிவரின் மைந்தனை மீட்டுத் தருகின்றான்.[3] சத்தவனைக் கோகுலத்திலும் அக்ரூரனை அத்தினாபுரத்திலும் விடுத்து, சராசந்தனை வதைக்கின்றான். முசுகுந்தனுக்கு அருள் புரிகின்றான். உருக்குமினி திருமணம் நடைபெறுகின்றது. பிரத்யும்நன் பிறக்கின்றான். சத்தியபாமை திருமணமும் நடைபெறுகின்றது. சததன்னு வதம், காளிந்தி மணம், பின்னும் பலர் மணங்கள், நரகாசுர வதம், பிரத்யும்நன், அநிருத்தன் மணங்கள்,நிருதனுக்கு அருள் புரிதல், பலராமன் கோகுலம் அடைதல், பவுண்ட்ரன் வதம், சாம்பன் மணம், பதினாயிரம் கோபியரோடு விளையாடல், தருமபுத்திரன் செய்த இராசசூய யாக முடிவில் அக்கிர பூசை யாருக்குச் செய்வதென சிந்திக்கும்போது கண்ணனே அக்கிர பூசைக்குரியவன் என்று சகதேவன் துணிந்துரைத்தல்:
- பூப்பவன் றானும் பூவாப்
- பொழிலெலாம் பூத்து நின்ற
- காப்பவன் றானும் ஊழிக்
- கடையினிற் கனலும் தீயால்
- தீப்பவன் றானும் ஆயர்
- தேமொழி மாதர் கொங்கை
- கூப்பிடத் தூசு வாரிக்
- குளிர்மரத் திவர்ந்த கோவே
29