பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வை.பு.இ புராண பாகவதம்


பகுதி ஆறு பாடல்கள் உடையது. இவற்றில் முறையே ஆலிலையில் பள்ளி கொண்ட குழவி, யாவும் தானாகி நின்ற தலைவன், பரமபதத்து ஒளி கொளரி, தசரதனடியில் வீழ்ந்த செம்மல், வாசுதேவன், மகிழ் திருப்பணி செய் ஆயனார் என்று வணக்கம் கூறப்பெறுகின்றது.

முதல் படலம் திருவரங்கப் படலம் என்பது; 155 பாடல்களையுடையது. முதல் வாழ்த்து காவிரிக்கு

சீராகும் இந்திரை மண்மகள்
சேர்ந்து போற்ற
ஓரா யிரவாய் பணிமீது
உறைவானை உள்கி
நீராயுழ னந்திரு பாலும்
நிறைந்து நேர்ந்த
காராளன் பொழில்சூழ் திருக்காவிரி
வாழி வாழி.

என்பது. பிறகு அரங்கநகர் அப்பன் பாதாதி கேசமாகப் பல பாடல்களில் வாழ்த்தப் பெறுகின்றார். அரங்கநாதன் அடியினை பீதாம்பரம், உந்தி மலர், உதரபந்தனம், கவுத்துவம், வாயும் முறுவலும், கண்டம், கண்ணினை, திருமுகச்செவ்வி, நீலமேனி மகுடம்11 , பஞ்சாயுதங்கள், பின் அரங்கநாயகி, பூதேவி, நீளை, கோதை, சூடிக்கொடுத்தவள், பிரணவ விமானம், அனந்தன், சேனாபதி, அநுமன் வாயில்காவலர், இவ்வாறு வருகின்றன. இதன் பிறகு தலங்களுக்கு வாழ்த்து கூறப் பெறுகின்றது. முதலில் அரங்கம் தொடங்கி பின் 83 பாடல்களில் 108 திருப்பதிகட்கும் வாழ்த்து சொல்லப் பெறுகின்றது. அடுத்த பாடலில் வருபவர்கள் இத்தலங்களில் எழுந்தருளியுள்ள மலர் மங்கை நிலமங்கை, குழுத்தேவர் ஆகியோர். அடுத்த பாடலில் பிரகலாதன் முதல் வீடணன் வரையுள்ள பாகவதர்கள் ஆகியோர் வருகின்றனர். பின்னர் பன்னிரு ஆழ்வார்கள், இராமாநுசர்,நாதமுனி, உய்யக்கொண்டார், மணக்கால்

12 அமலனாதிபிரான் (திருப்பாணாழ்வார்) நினைவுக்கு வருகின்றது.

37