பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


(66-70), ஆகிய நிகழ்ச்சிகள் வரிசையாக நடைபெறுகின்றன. சூழ்ந்த சேனைகளை முறியடித்துச் செல்லும்போது உருக்குமிதனைப் பலராமன் மார்பில் அடித்துத் தலையை முறிக்கப் போகும்போது உருக்குமிணிக்காக அவனை விடச் செய்கின்றான். மீண்டும் உருக்குமிதன் சண்டைக்கு வர அவனைப் பங்கப்படுத்தி வெற்றியோடு துவாரகை அடைகின்றான் (71-78), உருக்குமிணிப் பிராட்டி திருமணம் (79) சிறப்பாக நடைபெறுகின்றது.

சத்திராசித்து மன்னன் என்பவன் சிறப்பான சமந்தக மணி வைத்திருக்கிறான். அதைக் கண்ணன் கேட்டபோது அவன் கொடுக்கவில்லை. அவன் தம்பி அம்மணியை அணிந்து வேட்டையாடும்போது ஒரு சிங்கம் அவனைக் கொன்று மணியோடு செல்ல, கரடியரசன் சாம்பவான் அச்சிங்கத்தைக் கொன்று அம்மணியைத் தன் மகள் சாம்பவதிக்குக் கொடுத்தான். கண்ணன் சாம்பவதியை மணந்து அம்மணியைப் பெற்றபின் சத்திரசித்து உண்மையறிந்து தன் மகள் சத்தியபாமையைக் கண்ணனுக்கு மணம் செய்து கொடுத்தான் (80-81). சத்தியபாமையின் தந்தை சத்திராசித்துவைக் கொன்ற சதத்தனுவாவை வதைத்தான் (82). தன்னை விரும்பித் தவம் செய்த காளிந்தியை மணந்தான் (83). மித்திர விந்தை சுயம்வரத்திற்குச் சென்று அவளை மணந்தான் (84. ஏழு விடைகளை அழித்து நாக்கின சித்துவை மணந்தான் (85). பத்திரை என்ற பெண்ணை மணந்தான் (85. வில் வளைத்து மச்சம் வீழ்த்தி இலக்கனையை மணந்தான் (87), நரகாசுரன் வதை (88), பாரிஜாதத்தைப் பெற்று சத்தியபாமைக்குக் கொடுத்தல் (89). சுபத்திரையை அர்ச்சுனனுக்கு மணம் செய்வித்தல் (90), வசுதேவர் வேள்வி செய்தல் (91.கண்டகர்ணன் முக்தி(92). கயிலாய யாத்திரை, பெளண்டனன் வதை, சுதரிக்கனன் வதை, துவிந்தன் வதை (93-96).

மன்மதன் பிறப்பு, சம்புராசன் வதை, அநிருத்தன் பிறப்பு, கண்ணன் ஏக காலத்தில் பதினாறு ஆயிரம் கோபியருடனும் கூடி வாழ்ந்திருத்தலை நாரதன் காணுதல் (97-99) அங்கிசமன், திபிகன் வதை (100), ஓந்தியாய் இருந்த நிருகராஜன் (101). உருக்குமிணி திருமணம் (102) பரசுராமன் அத்தினாபுரத்தைப் பெயர்த்து எறிவதற்கு அஞ்சி துரியோதனன் தன் மகள் இலக்கணையைக் கண்ணன் மகன்

44