பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.புராண பாகவதம்


கூறுமிடத்து, பெரியாழ்வார் திருமொழிப் பாசுரங்களையொட்டிக் கருத்துகள் அமைத்திருப்பதைக் காண முடிகின்றது. பொற்கொடிக்குச் சாதகம் பண்ணினார், தாயர் வாய்ச்சங்கம், பைந்தமிழ் காட்டினர், காமம் உருக்குமிணி என விளம்பினர், சோபனம் பாடித் தொட்டிலுய்த்தனர், பொன்னின் சங்கிலித் தொட்டிலாட்டித் தொனியெழப் பாடுவார், தாலேலோ என்று சாற்றினார், திருவிளையாடீரெனவே விளம்புவார், திருவே செங்கீரையாடுக, சப்பாணிகை கொட்டுக, தவழ்ந்தே விளையாடுதி, தோள்வீசி நடந்திடு, தளருந் நடை நீ நட, புறம்புல்குதி, அக்காக்கை பொனாலமர் கோல் கொடுவா, தும்பி மலருது, பின்னர் கழங்குமாடிக் களித்து வந்தாள், அம்மானையுமாடினள், பந்தாடியு வந்தனள், ஊசல்லினி நாடினள், நீராடல் உவந்தனள் - என்ற சொல் வழக்குகளில் பெரியாழ்வார் பாணியில் பிள்ளைத்தமிழ் பொருளமைப்பினைக் காண முடிகின்றது.

பேதை, பெதும்பை நிலைகளை மேற்காட்டியவாறு அமைத்தபின்னர் மங்கைப் பருவ அழகை விரிக்கின்றார். பாதாதிகேசமாக 25 பாடல்களைக் காண்கின்றோம். சில சமயம் முழுப் பிரபந்தங்களையே இவர் நூலுள் அமைத்துள்ளதையும் கான முடிகின்றது. அவ்வாறு அமைத்தவை ஊசல், பள்ளியெழுச்சி என்பனவாகும். ஊசலில் பெரிதும் விருப்பமுடையவர் போலும்[1] சந்தர்ப்பம் நேர்ந்தபொழுதெல்லாம் ஊசல் வழக்குதலைகாட்டுகின்றது. உருக்குமிணி திருமணத்தில் 'பொன்னுரசலினேறினள் பூந்திரு' என்று பன்முறை குறிப்பிட்டபிறகு நான்கு பாடல்கள் ஆடிரூசல் என்று அமைத்து மகிழ்கின்றார்.

கைவளைகள் கலகலென ஆடீரூசல்
காலிலணி சிலம்பார்ப்ப ஆடீருசல்
மொய்யணிஐம் பாலிலெழ ஆடீரூசல்
மூவுலகில் நிகரில்மின்னே ஆடீரூசல்
மெய்யுரைசெய் நாவுடையீர் ஆடீரூசல்
விதர்ப்பனருள் மெல்லியலிர் ஆடீரூசல்


  1. 23 பிள்ளைப்பெருமாள் அய்யங்காரின் 'ஊசல் இலக்கியம்' நினைவிற்கு வருகின்றது.

57