பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ புரான பாகவதம்


விநாயகரையும் சண்முகரையும் குறிப்பிடுகின்றார். அங்கு அம்பிகைபாகன் ஆலயமும் உள்ளதாகக் கூறுவர். இதுபோலவே நாச்சியார் தேரேறு படலத்தில் கண்ணன் வராதது கண்டு உருக்குமினி அம்பிகைக்கு அர்ச்சனை புரிந்து வேண்டுகிறாள். அம்பிகையை அங்கு துர்க்கை என்று குறிப்பிடுகின்றார்.

சரித்திரத்தின் தன்மையால் ஆசிரியர் திருமால் பரத்துவம் கூறும் நிலைமை இருப்பினும், பல இடங்களிலும் சிவனுக்கும் திருமாலுக்கும் வேறுபாடின்மையை நன்குணர்த்திச் செல்வதைக் காணலாம். தட்சகப் படலத்தில் அரிஅரனுடனே, 'உன்னை என்கினரேல் என்னையும் அகற்றினராம். உன்றனைத்தான் யானென உணரார் சாந்தியை உறார் என்று ஒதுவதைக் காணலாம். 'கயிலாய யாத்திரைப் படலத்தில் அரிஅரன் இருவரும் ஒருவரையொருவர் துதித்துக் கொள்வதைக் காணலாம்.

வரையினைத் தனுவாய் வளைத்தருள் முதல்வா
நம, உனை மதிக்கிலா அசுரர்
திரிபுர மெரித்த சிவநம, இந்து
திகழ்கின்ற வேணியாய் நமவே,
கரியுரு தனைப்போர்த் தருளுவாய் நமவே
கறைமிடற் றிறைவனே நமவே
அரகரா நமவே, பசுபதி நமவே,
அந்தகாந் தகாநம என்றான்.

இது திருமால் சிவபெருமானைத்துதித்தது.சிவபெருமான் திருமாலைத் துதித்தது'கேசவ நமவே என்ற பாடல் முன்னர்க் காட்டப் பெற்றது[1]: மேலும் சிவபிரான் வருணனைக் கூறும்போது இவர் சைவசம்பிரதாயம் முழுமையும் தழுவிச் செல்வதைக் காணலாம். -

வானதி பிறைவெண் கூவிளை கடுக்கை
சாந்தையோ டெருக்கலர் மத்தம்
பூநிறை சடைகள் அசைந்திட நுதலின்
அழல்விழி பொருந்திடப் பஞ்ச


  1. 24 இந்நூல் பக்கம் 50-ல் காண்க
61