பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்




ஆனைந் திகழ உழைமழுக் கபாலம்
அழல்கரித் துறமலை யரையன்
மானிடத் திலகக் கொடிகுடை வயங்க
அரனுயர் விடையின்மேல் வந்தான்.


உரககங்கணம் கையில் இலங்கிடச் சூலம்
ஒளிவிட உமாபதி விடைமேற்
சரியிலாப் பவளக் கிரியென வரவே
சங்கொடு தமருகம் முழங்க
மரவுரி யுடுத்த சதமுகன் குண்டோ
தரன்திரி வாமிமா வனுவோடு
அரிமுகன் பஞ்ச வாகுவெண் ணிற்றை
அணிந்தவர் அன்புடன் அடைந்தார்.

என்ற பாடல்களில் இப்பண்பைக் கண்ணுறலாம்.

கம்பராமாயணத் தொடரும் கருத்தும் இந்நூலெங்கும் ஒளிர்வதைக் காணலாம். இஃது இயற்கை. பெருநூல் செய்த இவ்வாசிரியர், தம்மினும் பெருநூல் செய்தாரைப் பயின்று செய்ததே மரபு:நாடிய பொருள் கைகூடும் என்ற பாடலைத் தழுவியது முன்னர் காட்டப் பெற்றது. 'வண்மை யில்லையோர் வறுமை யின்மையால்’[1] என்ற கம்பன் பாடலைத்தழுவி எழுந்தது இவண் காட்டப் பெறும் பாடல்

மறமில்லை மனந்தனின் ஞானமுற
அறனில்லை அதன்ம மிலாதுயரும்,
உறவில்லை உறும்பகை யின்மையினால்
குறைவில்லைவள நாடியல் கூறரிதே.

என்பது.

'நாராயணன் எங்கும் இருக்கின்றான் என்று இரணியன் முன் சொன்ன கம்பர் பாடல்:


  1. 25 கம்ப ராமாயணம், பால காண்டம் நாட்டுப் படலம் - 53
62