பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்



இந்தப் பாகவதம் திருமாலின் பத்து அவதாரங்களையும் விவரிக்கின்றது. முதல் ஏழு அவதாரங்களையும் தனித்தனிப் படலங்களில் குறித்துக் கூறிய பின்னர் நாரத முனிவன் கண்ணன் பிறப்பு முதல், அவனே உருக்குமிணிக்கேற்ற மணவாளன் என்று கூறுவது வரையில் பல படலங்களால் விரித்துரைக்கின்றார். இதுவரையில் நூலின் பாதிப்பகுதியாகும்.கண்ணன்மணம் செய்தபின் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அடுத்த பகுதி. வைதிகப் படலத்தில், கண்ணன் உருக்குமணியுடன் ஒர் யாகம் செய்யத் தொடங்குகின்றான். அப்போது ஒர் அந்தணன் தோன்றி, "என் பிள்ளைகள் மூவர் பிறந்தவுடன் உடலோடு மாயையால் மறைந்து விட்டார்கள். என் மனைவிநாலாம்பிள்ளை பெறப்போகின்றாள்.இப்பிள்ளையையேனும் மாயையால் மறையாமல் நீ காத்தருள் என்று வேண்டலும், பார்த்தன் அதற்கு உறுதியளிக்கின்றான். அப்பிள்ளையும் பிறந்தவுடன் மறைந்தது கண்ட வேதியன் பார்த்தனுடைய வில்லாற்றலைப் பழிக்கின்றான். கண்ணனிடம் முறையிட, அவன் அவ்வேதியனையும் பார்த்தனையும் தேரில் ஏற்றிக்கொண்டு விரசையாற்றங்கரையில் இருவரையும் நிறுத்திவிட்டு, அப்பால் வைகுந்தம் புகுகின்றான்.

அங்குக் கீழ்த்திசையில் சண்டப்பிரசண்டர், தென் திசையில் பத்திரசயத்திரதர், மேல் திசையில் சயவிரதர், வடதிசையில் நாதாவிதாதா காவல் உட்சென்று அங்கு அச்சுதனைக் காண்கின்றான். "அந்தணன் சிறுவனைத் தருகின்றேன். நீ அவனியில் தச அவதாரம், இந்துவின் வதனத் தெண்மர் தேவியர் மகிழ்ந்திடக் காட்டுதி” என்றான்.இவனும் மச்சாவதாரம் முதலான எல்லா நிகழ்ச்சிகளையும் விரிவாய் நடித்துக் காட்டுகின்றான். தனது அவதார நிகழ்ச்சிகளையும் விரிவாய் நடித்து மறையவன் புதல்வனுக்காக இங்கு வந்து நிற்பதையும் நடித்துக் காட்டி, மேல்வரப் போகிற பரியுருவாகிய கல்கி அவதாரத்தையும் நடித்துக் காட்டுகின்றான். விமலன் மகிழ்ந்து சிறுவனைத் தரவே, பெற்று வந்து அந்தணனிடம் கொடுக்கின்றான்.[1]


  1. 26”வைணவ உரைகளில் இந்த வரலாறு வேறு மாற்றங்களுடன் காணப் பெறுகின்றது. அங்கு நான்கு பிள்ளைகளை மூன்று தேவியரும் மறைத்ததாகவும், அவர்கள் கண்ணன் அவதாரத்தை இங்குள்ளாருக்குக் காட்டுவதற்காக இந்த யுக்தியை மேற்கொண்டதாகவும் கூறுகின்றனர். மேலும் பார்த்தனும் பரந்தாமனும் மட்டிலும் அங்கு வந்ததாகக் குறிப்பு பாாததன வைகுநதம புகுவதறகுப பககுவபபடாததால் அவனை விரசையின் இக்கரையிலே விட்டுவிட்டுத்தான் மட்டிலும் உட்புகுந்து நான்கு பிள்ளைகளுடன் வெளிவந்ததாகக் குறிப்பு.
64