பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


பொருநைத் துறையான சங்கணித் துறையை வருணிக்கின்றன. இவ்வாசிரியருடைய வருணனைகளில், ஒரே அமைப்புடைய எளிய தொடரை வைத்துப் பல பாடல்களை அடுக்கி முடிப்பது ஒரு வழக்கம். 'விரசைமேற் கொள்வதுந் திடனாமே என்ற முடிவுடைய பாடல்கள் ஆறு பின் வருவது ஒன்று (120);

பூவின் மேற்கொளும் திருமகள்
கலந்தமெய்ப் பொருணாமம்
நாவின் மேற்கொளும் நாவலர்
நால்வகைத் தெனலாகும்
பாவின் மேற்கொளச் சங்கணித்
துறையெனப் பகர்ந்தாலத்
தேவு மேற்கொளும் விரசைமேற்
கொள்வதுந் திடனாமே.

என்பதில் இப்பண்பைக் காணலாம்.

'புறநகர் வாழ்த்து' என்ற அடுத்த சருக்கத்தில் உலகரயதன் வாமன், அருகன், புத்தன், நானே பிரமம் என்பான்’ ஆகிய சமயத்தாரைப் பல பாடல்களால் கண்டிக்கின்றார். 'நானே பிரமம்' என்பாரைக்கண்டிக்கும் பாடல்கள் நூலுள் பல உள்ளன.14 பாடல்களில் தசாவதாரங்களையும் போற்றியுள்ளார். மீனம், கமடம், கேழல், நாரசிங்கம், குறள், பரசுராமன், வென்றித் தனுராமன், பெலதேவன், கோபாலக்குழந்தை, துரகதமாந் தனிமுதல்வன் என கோபாலனுக்கு மட்டிலும் 5 பாடல்கள்; இப்படியே நூலுள் பிற இடங்களிலும் அவதாரங்களைச் சந்தர்ப்பம் நேர்ந்தபோதெல்லாம் போற்றியுரைப்பர். வானரங்களின் செயல்கள் மிகவும் அதிகமான பாடல்களில் (224-256) கூறப் பெறுகின்றன. பெண்களின் தன்மையை உரைக்கும்போது பெருங்காப்பியத் தன்மைக்கேற்ப, அவர்களின் கற்பிலக்கணம் அடுத்த சருக்கத்தில் 11 பாடல்களில் பகரப்பெறுகின்றது. வேளாளர், வணிகர், மள்ளர், வேதியர் தன்மைகள் முறையாகத் தொடர்ந்து பல பாடல்களில், முன்னுள்ள பேரிலக்கியங்களின் பொருளைத் தழுவியே எங்கும் பாடுவார்; கிள்ளைகள் வேதமும் தமிழும் பாடுகின்றனவாம்.

72