பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

15

தேர்ந்தவர் போற்றும் பாரத—நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)

‘இப்படையில் நான் ஒருவன்’ என்ற பெருமித உணர்வை விடுதலைப்படை வீரர்களுக்கு ஊட்டினார்.

கோழைகளாக, அடிமை மயக்கத்தில் ஆழ்ந்து, அஞ்சி நடுங்குகிற மக்களை விடுதலை வீரர்களாக்கும் பணியை வ. உ. சிதம்பரனார் மேற்கொண்டார். பாரதி கவிதையில் போர்முரசு கொட்டினார். நூற்றாண்டுகளாகத் தன்னம்பிக்கையிழந்து உறங்கிக்கிடந்த மக்களை, நம் நாட்டில், நமக்காக சுபிட்ச வாழ்வமைத்து வாழவேண்டும்’ என்ற புத்துணர்வைப் பாரதி தூண்டினார். அதைச் செயலாக்கும் முயற்சியில் வ. உ. சி. ஈடுபட்டார். இம்மாபெரும் பணியை, சுதந்திரம் கிடைத்தபின் மதிப்பிடுவது அவ்வளவு எளிதன்று. 1908இல் இருந்த மக்கள் உணர்வு, நம்பிக்கைகளை அறிந்து மதிப்பிட்டால், எவ்வளவு பெரிய புரட்சிப்பணியை இவ்விரு தலைவர்களும் மேற்கொண்டார்கள் என்று தெரியும். பாரதியும், வ. உ. சி.யும் மறக்கப்பட்டு வருகிறார்கள். பிரிவினை சக்திகளும், பிளவு சக்திகளும், வ. உ. சி. கப்பலோட்டிய தமிழர் என்று பட்டம் சூட்டி, தமிழர் என்ற சொல்லில் அழுத்தம் கொடுத்து, தங்கள் கருத்துக்கேற்ற சித்திரமாக அவரை ஆக்க முயலுகின்றன. பாரதியையோ, நெராக எதிர்க்க முடியாமல் மறைமுகமாகக் கூறி, பாரதியின் செல்வாக்கைக் குறைக்க முயலுகிறார்கள். இந்நிலையில் அவர்களது பிறந்தநாள் விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடுவதும், அவர்களது மாபெரும் செயல்களைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதும் அவசியமாகும்.

குழந்தைப் பருவம்

கருவிலே திருவுடையாராகச் சிதம்பரம் பிள்ளை பிறக்கவில்லை. பிராமணருக்கு அடுத்த உயர்ந்த சாதியான சைவ வேளாளர் சாதியில் பிறந்த எந்தச் சிறுவனையும் போலவே அவர் பிறந்து வளர்ந்தார். 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் ஒட்டப்பிடாரம் என்ற கிராமத்தில் அவர் பிற்ந்தார். இக்கிராமம் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ளது.

இவ்வூர் கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போராடிய போர்க்களமாயிருந்தது. 1799இல் கட்டபொம்மு வீரப்போர் நிகழ்த்தித் தோற்றுப்போய், பிடிபட்டுத் தூக்கி