பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வ. உ. சி.

லிடப்பட்டான். அவனுக்குப் பின், ஊமைத்துரை இடிபட்ட கோட்டையையும் கட்டி, போர்க்கொடி உயர்த்தி மீண்டும் போராடினான். ஆங்கிலேயரது ஆயுதபலம் கோட்டையைத் தரைமட்டமாக்கியது. ஊமைத்துரை மக்கள் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினான். அவன் கோட்டையைவிட்டு 1801இல் வெளியேறி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருது சகோதரர்களோடு சேர்ந்து வெள்ளையர் ஆக்கிரமிப்புப் போரில் உயிர் நீத்தான். இப்போராட்டங்களில் விடுதலை வீரர்கள் தோல்வியடைந்த போதிலும், வெள்ளையரை எதிர்த்துப் போராடும் வீரவுணர்வை அது வளர்த்தது. வெள்ளையர் வெற்றி பெற்றுக் கோட்டையை அழித்து, விடுதலை வீரர்களில் பலரைத் துரக்கிலிட்டும், இன்னும் பலரை மனிதவாசமில்லாத தீவுகளுக்கு அனுப்பியும் கொடுமைகள் பல புரித்தனர்.

இப்புத்துணர்வைப் போற்றி நாட்டுப் பாடல்களும் நாட்டுக் கதைகளும் எழுத்தன. அவை மக்கள் மனத்தில் வாழ்ந்தன. இப்பாடல்களைப் பாடக்கூடாதென வெள்ளையர் தடை விதித்தனர். தடையையும் மீறி நாட்டுப் பாடல்கள் நிலைத்த வாழ்வு பெற்றன. இப்பாடல்கள் எதிரொலிக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அண்மையான ஒட்டப்பிடாரத்தில் வாழ்ந்த சிதம்பரம் பிள்ளை, சிறு வயதில் இப்பாடல்களைக் கேட்டு, அவற்றின் வீர உணர்வைக் கிரகித்துக் கொண்டார். கட்டபொம்மு, ஊமைத்துரை முதலிய வீரர் கதைகளில் ஈடுபாடு கொண்டார்.

அவர், வீரம் பெருமாள் அண்ணாவி என்ற பரம்பரை ஆசிரியர் நடத்திய திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். தொடக்கப் பள்ளியில் மரபுவழிக் கல்வி கற்றார். அப்பள்ளியில் படிப்பு முடித்ததும், அவருடைய தந்தையார் உலகநாத பிள்ளை அவருக்காக ஒரு நடுநிலைப் பள்ளியைத் தொடங்கினார். அங்கு தமது நண்பர்களோடு ஆங்கிலமும், மரபு வழிப் பாடங்களும் கற்றார். பிறகு இரண்டு ஆண்டுகள் துரத்துக்குடியில் ரோமன் கத்தோலிக்கத் துறவிகள் நடத்திய புனித சேவியர் பள்ளியில் சேர்ந்து கற்றார். பிற்காலத்தில் இந்த நகரம் அவரது தேசியப் புரட்சிப் போராட்டங்களுக்குக் களமாக இருந்தது.

தம் ஊரைச் சுயசரிதையில் குறிப்பிடும் பொழுது கட்டபொம்மன் ஊர் பாஞ்சையின் பக்கத்திலுள்ளது என்று வ. உ. சி. குறிப்பிடுகிறார்.

பள்ளிப் பருவத்தில் அவர் அதிகமாகக் கவனமோ, திறமையோ காட்டவில்லை. அவர் விளையாட்டுக்களில்