பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

25

உதறியெறிந்துவிட்டுத் தமிழ்நாட்டில் பல நகரங்களுக்கும் சென்று, தேசபக்தர்களைச் சந்தித்து, உதிரியாகக் கிடக்கும் அவர்களை ஒரே பெருவெள்ளமாகச் செயல்படத் தூண்டினார். விடுதலை இலட்சியத்தில் அசையாத நம்பிக்கை கொண்டவர். இந்திய மக்களிடம் பேரன்பு கொண்டவர். அவரது இலக்கியத்திறமை அவர் நடத்திய ‘ஞானபானு’ மூலம் வெளியானது. அவரது பேச்சுத்திறனைத் தேசவிடுதலை இயக்கத்திற்கு அர்ப்பணித்தார். அவரது திறமைகள் அனைத்தையும் தேசிய விடுதலை இயக்கம் தனக்கென்றே கவர்ந்து கொண்டது. அவருக்கு இணை சிதம்பரம் பிள்ளைதான். இருவரும் இணைந்து சுதேசி இயக்கத்தை வளர்த்தனர்.

விடுதலை முழக்கம் வானில் எதிரொலித்தது. வந்தே மாதரம் என்ற முழக்கம் வெள்ளையரைக் கண்டு அஞ்சிய கோழைகளையும், வீரர்களாக்கியது. அந்நியநாட்டு உடை உடுத்தவர்களை மக்கள் ஏளனமாகக் கருதினர். சலவை செய்வோர் அந்நியத் துணிகளைச் சலவை செய்ய மறுத்தனர். பிரிட்டிஷ் கப்பல்களில் சரக்கு அனுப்பியவர்களின் துணிகளை அவர்கள் துவைக்க மறுத்தனர். நாட்டில் பிரிட்டிஷ்காரர்களை ஆதரிப்பவர்களுக்குச் சவரம் செய்வோர் உடன்படவில்லை. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் வக்கீல், சிதம்பரம்பிள்ளையைக் குறைவாகப் பேசியதைக் கேட்ட நாவிதர் அவருக்குப் பாதிச்சவரம் செய்து அப்படியே விட்டுவிட்டார். வண்டிக்காரர்கள் வெள்ளையர்களை ஆதரித்தவர்களைத் தமது வண்டிகளில் ஏறவிடவில்லை. வ.உ.சி.யின் சொற்கள் மக்களுக்கு ஆணையாயிற்று. தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள், தொழிற்சங்கம் அமைத்துத் தங்கள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் தேச விடுதலைக்காகவும் வேலை நிறுத்தம் செய்தனர். வ.உ.சி. அவர்களது சங்கத்திற்குத் தலைவர்.

இந்த உணர்ச்சிமிக்க நிலையில் திருநெல்வேலியில் மார்ச் 9 இல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிதம்பரம் பிள்ளையும் சிவாவும் பிபின் சந்திரபாலர் விடுதலையை வரவேற்றுப் பேசினார்கள். கூட்டம் அமைதியாக நடந்து கலைந்தது. அதிகாரிகள் மக்களது விடுதலையார்வத்தைக் கண்டு கூட்டத்தைக் கலைக்க முயலவில்லை. அதிகார முறையில் கூட்டம் தடை செய்யப்படவில்லை. சிதம்பரம் பிள்ளையை அழைத்து மார்ச் 9 கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று துரத்துக்குடி மாஜிஸ்டிரேட் வாய்ச் சொல்லால் எச்சரித்திருந்தார். அவ்வாறு எழுதிக்கொடுக்க அவர் மறுத்துவிட்டார்.