பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வ.உ.சி.

அங்கே பிள்ளையின் ஆதரவாளர்கள் பெருங்கூட்டமாகச் (செய்தி தெரிந்துகொள்ளக் கூடினர், ஆயிரக்கணக்கானவர் கூடியதால், அதுவே பொதுக்கூட்டமாக மாறியது. ஆஷ் என்ற உதவிக் கலெக்டர் கூட்டத்தைக் கலையுமாறு உத்தரவிட்டான், கூட்டத்திலிருந்த மக்கள் கலையமுடியாதென உறுதியாக மறுத்தனர். அவள் கூட்டத்தைத் தடி கொண்டு தாக்கப் போலீசாருக்கு உத்தரவிட்டான். போலீஸ் படை தடிகளைச் சுழற்றிக் கொண்டு கூட்டத்தைத் தாக்கியது. தேசிய உணர்வு கொண்ட மக்கள் திருப்பித் தாக்கினர். குதிரை மீது ஏறியிருந்த ஆஷ்துரையை அவர்கள் கீழே இழுத்தெறிந்து மிதித்தும் உதைத்தும் இழிவுபடுத்தினர். போலீசாரும் கோபங்கொண்ட, மக்கள் முன்னால் நிற்க முடியாமல் அடியும் கல்லெறியும் பட்டு ஓடினர்.

சிறையிலிருந்த தலைவர்கள் தங்களுக்கு ஆதரவாக விடுதலையுணர்வு கொண்ட மக்களது செயல்களை அமைதியான திருப்தியோடு கேள்விப்பட்டனர். சிறையில் பணிபுரிந்த ஓர் ஆங்கிலேய ஜெயிலர், தேசத் தலைவர்களை அவமானப்படுத்தும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான். யார் யாரெல்லாம் சிதம்பரனாருக்கு உணவு அனுப்பினார்களோ அவர்களையெல்லாம் சிறைக்குள் தள்ளினான், அவருக்கு உணவு கிடைக்காமல் செய்தான், அப்படியும் சிறைக்கு அஞ்சாத பலர், அவருக்கு உணவளிக்க முன் வந்தனர்.

சிறையில் சுகாதார வசதிகளும் பிற வசதிகளும் சராசரி மனித வாழ்க்கை நடத்தவே போதுமானதாக இல்லை. அவர்கள் நேரத்தை இலக்கியம் கற்பதிலும் உயர்நீதி மன்றத்திற்கு அப்பீல் மனுக்கள் எழுதுவதிலும் நண்பர்களுக்கும் வீட்டிற்கும் கடிதங்கள் எழுதுவதிலும் எஞ்சிய நேரத்தைச் சீட்டாடுவதிலும் கழித்தார்கள். சிறையில் கிரிமினல் கைதிகளுக்கு அப்பீல் மனுக்கள் எழுதிக் கொடுத்தும் அவர்களைச் சட்ட விரோதமாகச் சிறை அதிகாரிகள் அடித்து உதைக்கும்பொழுது அதைக் கண்டித்துக் கோஷங்கள் எழுப்பியும் உதவியதால் அவர்களுடைய அன்பையும், ஆதரவையும் அரசியல் கைதிகள் முழுமையாகப் பெற்றிருந்தார்கள்.

சிறை நிர்வாகத்தையே சிதம்பரம் பிள்ளையின் யோசனை கேட்காமல் நடத்த முடியாதென்ற நிலைமை அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

அவர்கள் அவரை வேறு சிறைக்கு மாற்றும்படி வேண்டிக் கொண்டனர். வ.உ.சி. கோவைச் சிறைக்கு மாற்றப்பட்டார். ரயிலில் அவரைக் கோவைக்குக் கொண்டு