பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வ.உ.சி.

சென்றபோது மணியாச்சியில் ரயில் நின்றது. வாஞ்சிநாதன் அவனையே பின்பற்றி வந்து, அவனைச் சுட்டுக் கொன்று வஞ்சம் தீர்த்துக் கொண்டான், போலீசார் கையில் அகப்பட விரும்பாமல், கழிப்பிடத்திற்குள் நுழைந்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தான்.

சிறை டாக்டர், சிதம்பரம் பிள்ளையின் நண்பர். வெள்ளையர்களுக்குத் தெரியாமல் அவரோடு உரையாடுவார். அவர்தான் ஆஷ் கொலையுண்ட செய்தியையும் வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொண்ட செய்தியையும் வ. உ. சி.க்குக் கூறினார். “இந் நற்செய்தியை வரவேற்கிறேன்” என்று வ. உ. சி. மகிழ்ச்சியோடு கூறினார்.

இரண்டாண்டுகள் கோவைச் சிறையில் இருந்த பின்னர் அவர் 1912 டிசம்பர் மாதம் விடுதலையானார்.

அவர் விடுதலையாவதற்கு முன்னர் சுதேசிக் கப்பல் கம்பெனியின் முதலாளித்துவ டைரக்டர்கள், அக்கம்பெனியைப் பல சாகசங்களால் அழிக்கவும் வ. உ. சிதம்பரம் பிள்ளையைச் சிறைக்கனுப்பவும் முயன்று வெற்றி கண்ட பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கே விற்றுவிட்டார்கள், இச்செய்தி அவர் மனத்தில் பெருங்கவலையை ஏற்படுத்தியது. இவ்வதிர்ச்சியிலிருந்து விடுபட அவருக்குப் பல ஆண்டுகள் ஆயின.

1908லிருந்து 1912 வரை நான்கு ஆண்டுகளில் புரட்சி இயக்கத்தில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. சிதம்பரம்பிள்ளை சிறைக்குச் செல்லும்போது, அவரை வழியனுப்பியது ஒரு மாபெருங்கூட்டம். அவரது தண்டனையைக் கண்டித்து எழுச்சிமிக்க எதிர்ப்பியக்கம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் கோவைச் சிறைக்கு மாற்றப்பட்டுக் கொண்டு செல்லப்படும் பொழுது உற்சாகமிக்க கூட்டங்கள் ரயில் நிலையம்தோறும் வழியனுப்பியது.

ஆனால், டிசம்பர் 1912இல் நிலைமை மாறிவிட்டது. தொடர்ச்சியான இயக்கம் மக்கள் உணர்வு நிலைமையைத் தாழாமல் வைத்திருக்கவில்லை. நாலாண்டுக்கு முன் இருந்த உணர்ச்சி நிலை காட்டு வெள்ளம்போல வற்றிவிட்டது, தலைமையைப் பிரிந்த அவை சீர்குலைந்தன. பிரிட்டிஷ் கொடுமைகளை எதிர்க்கத் தலைமை தாங்கும் அணித் தலைமை சிறைக்குள் அடைக்கப்பட்டுவிட்டது.

பாரதியார் எதிர்பார்த்தது போல, “வேளாளன் சிறை புகுந்தான்; தமிழகத்தார் மன்னன் என மீள்வான்” என்ற வாக்குப் பொய்த்துப் போய்விட்டது. அவரைச் சிறை வாயிலில் வரவேற்கக் காத்திருந்தவர் ஒரே ஒருவர்தான். அது