பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

37


நெல்லை மாவட்டத்தில் வேளாளர் என்ற மிக உயர்ந்த சாதியில் பிறந்தவர் அவர். பிராமணர்களைவிடக் கட்டுப்பெட்டியான பழக்க வழக்கங்கள் உடைய சாதியினர் அவர்கள். இவர் தூத்துக்குடியில் அரசியலில் ஈடுபடும் பொழுது, கண்ணில்லாத தாழ்த்தப்பட்டவர்களைத் தம் வீட்டில் வளர்த்துக் கல்வி கற்பித்தார். பிற்காலத்தில் சகஜானந்தர் என்று துறவித் திருநாமம் பூண்ட தாழ்த்தப்பட்ட இளைஞருக்குச் சைவ சித்தாந்தமும் தமிழிலக்கியமும் கற்பித்து, மனம் துணிந்து வீட்டில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்.

இவரது இச்செயல்களுக்காக, அவர் சாதி நீக்கம் செய்யப்பட்டதுமுண்டு. தம் இனத்தில், உள்ள சாதிப் பித்தர்களின் வெறுப்புக்கு ஆளானாரே அன்றி, எல்லா இனத்தவர்களின் அபிமானத்துக்கும் ஆளானார். சிவா பிராமணர்; பூநூலை அறுத்தெறிந்து பிராமண கர்வத்தை விட்டொழித்தவர். இவருக்கு உதவியவர்களில் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரி யார் பிராமணர். வழக்கறிஞர்கள் பிராமணர்கள். இவர்கள் பிராமண குலத்தில் உதித்த தேசப்பற்று மிக்க, சாதிக் கருவம் இல்லாத மேலோர்.

அவருடைய வக்கீல் சன்னது திரும்பக் கிடைத்ததும் கோவில்பட்டிக்குச் சென்று தொழில் தொடங்கினார். பணத்தாசை கொண்ட, அரசியல் கொள்கையற்ற பிராமண வழக்கறிஞர்கள், இவர் மீது பொறாமை கொண்டு அற்பத் தனங்களில் ஈடுபட்டார்கள். அவர் மனம் குன்றித் தம்முடைய அரசியல் வாழ்க்கையின் வேர் போல் இருந்த தூத்துக்குடிக்குச் சென்றார். தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் வருமானம் அமோகமாக இல்லை. தமது ஓய்வை, இலக்கிய ஆய்விலும் தத்துவ ஆய்விலும் செலவழித்தார். தமது சுயசரிதையைச் செய்யுளில் எழுதினார். சில அரசியல் மாநாடுகளில் தலைமையுரை நிகழ்த்தினார்.

தமிழக அரசியல் வரலாற்றிற்கு அவர் ஆற்றிய சிறந்த பணிகள், தம்முடைய சுயசரிதையை எழுதி வெளியிட்டதும் பாரதியாருக்கும் அவருக்குமுள்ள உறவை ‘பாரதியாரும் நானும்’ என்ற கட்டுரையில் எழுதியதுமாகும். பார்த்தால் நூல்கள் 100 பக்கங்களுக்குள் தான் இருக்கும். ஆனால் அவற்றுள் தமிழக அரசியல் வரலாற்றின் துவக்க காலச் சிற்பிகளின் மன ஒற்றுமையும் நேசப்பான்மையும் புரட்சிகர மனப்பான்மையும் வெளியாகின்றன. ‘பாரதியாரும் நானும்’ என்று கட்டுரை, சிதம்பரம் பிள்ளைக்கும், பாரதிக்குமுள்ள ஆன்ம நேயத்தைச் சித்தரிக்கிறது. அக்காலத்து மக்களின் சமுதாய உணர்வைத் தூண்டி வளர்த்த இரு பெருமக்களது தோழமை

34/4