பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வ.உ.சி.


யுணர்வினை வெளிப்படுத்துகிறது. இருவரும் ஒரு தோழமைக் குழுவின் யோசனைப்படியே தம்தம் கடமைகளை வகுத்துக் கொண்டு அரசியல் பணிபுரிந்தார்கள். சங்கடங்கள் நேர்ந்தபோது இருவரும், பாண்டிச்சேரி, சென்னைக் குழுக்களைக் கலந்து கொண்டே, அவற்றிற்குத் தீர்வு கண்டார்கள். வ.உ.சி.யின் எல்லா தேசிய முயற்சிகளுக்கும், பாரதியின் இந்தியா முதலிய பல பத்திரிகைகளின் ஆதரவு உண்டு. அவ்வாறு ஆதரித்த காரணத்தாலேயே அவை பிரிட்டிஷ் அரசினால் அடக்கப்பட்டன.

வங்காளத்தில் தோன்றிய புரட்சித் தீயைத் தெற்கில் பரவச் செய்தவர்களில் பாரதியும் வ.உ.சி.யும் முக்கியமானவர்கள். அவர்களுடைய சுதேசிக் குழுவில் யாரும் முக்கியத் துவம் குறைந்தவர்களல்லர். ஆனால் அவர்களுள் செயல் வீரத்திலும் கவிதையால் மக்களுக்கு உணர்வூட்டுவதிலும் வ.உ.சி. யும் பாரதியும் இணையற்றவர்கள்.

அவர்கள், தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவித்து, வளர்த்தவர்கள். அரசியல், சமூகம், இலக்கியம் ஆகிய மூன்று துறைகளையும் இணைத்து மக்கள் சமூக உணர்வு நிலையை வளர்த்தார்கள். தொழிலாளரைத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளத் தொழிற்சங்க இயக்கத்தைத் தோற்றுவித்தார் வ.உ.சி. அவரது தமிழக மறுமலர்ச்சி இயக்கம் பரந்த அரசியல் பண்பாட்டுப் பின்னணி கொண்டது. அந்த வழியில் காலத்திற்கேற்ற முன்னேற்றம் காணவேண்டும்.

அவர் வாழ்க்கையின் இறுதி மணி நேரத்தை எப்படிக் கழித்தார் என்று அறிந்துகொள்ளுவது ஒரு சுவையான செய்தியாகும். பாரதியாரின் பாடல்கள் சிலவற்றை நல்ல குரலில் பாடுகிறவர் ஒருவர் பாடக் கேட்டுக்கொண்டே அவர் கடைசி மூச்சிழுத்தார். அவை ‘விடுதலைப் பாடல்’, ‘பாரத சமுதாயம்’ ஆகியன.

விடுதலை விடுதலை விடுதலை

    பறைய ருக்கும் இங்கு தீயர்
         புலைய ருக்கும் விடுதலை!
    பரவ ரோடு குறவருக்கும்
         மறவருக்கும் விடுதலை!
    திறமை கொண்ட தீமை யற்ற
         தொழில் புரிந்து யாவரும்
    தேர்ந்த கல்வி ஞான மெய்தி
         வாழ்வம் இந்த நாட்டிலே