பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6


ஆனால், தமிழகத்தில் இருந்த சில அரசியல் இயக்கங்கள் இதில் ஒவ்வொரு கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. நாட்டு நிலை, தமிழக நிலை இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்த வ.உ.சி. பொதுக் கருத்தொன்றை உருவாக்க விரும்பியிருக்கக்கூடும்.

அன்றைய அரசியல் சூழல் அதற்கு முழுமையான இடம் கொடுக்காவிட்டாலும் இன்னும் இந்தப் பொதுக் கருத்து உருவாக வேண்டியத் தேவை நீடித்து வருகிறது என்று கருதுவோர் இருக்கிறார்கள். இன்றைய அரசியல் நிலை வளர்ச்சி பெற்றிருக்கும் தன்மையையொட்டி, இந்தப் பின்னணி முழுமையாக ஆராயப்படுவது பயன் தருவதாக அமையும்.

வ.உ.சி. போன்று வேறு பல விடுதலை—மறுமலர்ச்சி இயக்தினரின் வரலாறும் வாழ்வும் ஆராயப்பட வேண்டும். பாரதி, சுப்பிரமணிய சிவா, சிங்காரவேலர், திரு.வி.க., சக்கரைச் செட்டியார், ஜீவா, பெரியார் போன்ற பலருடைய வாழ்வு மக்களுக்குத் தெரிய வழிசெய்யப்பட வேண்டும். வேறுபாடுகள் பல இருப்பினும் இவர்கள் பணி தமிழ் மக்களுக்குப் பயனாக அமைந்து பல்வேறு துறைகளில் வழி காட்டியுள்ளது என்பதை மறுப்பார் யாருமில்லை. இவர்களது பணிகளைப் பற்றிய தெளிவான வரையறைகளும் மதிப்பீடுகளும் எதிர்காலத் தலைமுறையினருக்கு ஆக்க முறையிலான அடிப்படைகளாக அமையமுடியும்.

நாடு விடுதலை பெற்ற பிறகு, மாநில—மைய அரசுகள் இத்தகைய முன்னோடிகளின் வரலாறுகளை முழுமையாகக் கொண்டு வர எத்தகைய முன் முயற்சிகளும் எடுக்கவில்லை என்பது வருத்தத்தக்கதாகும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் முதல் பெரியார் வரை தமிழகத்தில் வாழ்ந்த பலரைப்பற்றிய செய்திகளும் குறிப்புளும் அரசுப் பதிவேடுகளிலும் ஆவணங்களிலும் மிகுதியாகக் கிடைக்கின்றன. இவற்றைத் தொகுப்பதும் முறைப்படுத்துவதும் மதிப்பீடு செய்வதும் நமது கடமையாகும். சில சிறப்பு மிக்க பதிவேடுகள், ஆவணங்களிலிருந்து அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு, விவரங்கள் பலவற்றை அறிய முடியாத நிலையும் தோன்றியிருப்பதைப் பார்க்கிறோம்.

இந்த மாவீரர்களது பணிகளை மக்கள் முன் வைக்க இரண்டு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்வது நல்லது. முதல் கட்டமாக இவர்களைப் பற்றிக் கிடைக்கும் அனைத்துச் சான்றுகளையும் திரட்டி முழுமையாக வெளியிடவேண்டும். இவர்களைப் பற்றிய குறிப்புகள், இவர்களது எழுத்துக்கள். சொற்பொழிவுகள் ரகசியப் போலீசார் குறிப்புகள், அரசு அதிகாரிகளின் அறிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், தொடர்