பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என். வி. கலைமணி

9


கொள்ளிச் சட்டி ஏந்தி வந்தவன் சுற்றும் முற்றும் மீண்டும் பார்த்தான். பிறகு, பிணத்தின் காதருகே சென்று ஏதோ ரகசியம் கூறுவது போலக் குனிந்தான். செத்துவிட்ட பிணம் போல பாடையிலே படுத்துக்கிடந்தவர் திடீரென எழுந்து நின்றார். பாடை தூக்கிகளும், பின்நடை முன்நடை போட்டவர்களும், அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு வரட்டிப் படுக்கை மீது கொள்ளிச் சட்டி நெருப்பைக் கொட்டி, கற்பூரம் ஏற்றி நெருப்பை மூட்டி எரித்தார்கள்!

எரிந்தது; வெள்ளையர் ஆட்சி. சுடர் விட்ட சோதியாக வெளிச்சம் தந்தது. இந்திய சுதந்திரம் பாடைதூக்கிகளும், நெருப்புச் சட்டி ஏந்தியும், வ. வே. சு. ஐயரும் அந்த நெருப்புச் சோதியைப் பார்த்து விலா நோகச் சிரித்தார்கள்!

சின்னபாபு சமுத்திரம் ஊரருகே உள்ள சிற்றூரில் தனது நண்பரைக் கண்டு பேசிக் கொண்டிருந்தபோது, ஒற்றர்களால் துப்பறிந்து உண்மையைத் தெரிந்து கொண்ட பிரிட்டிஷ் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, அந்தப் போலீஸ் படையை ஏமாறவைக்க, வ.வே.சு. ஐயரும், அவரது ஆபத்துக்கு உதவிய நண்பரும் போட்ட வியூகம் இது.

ஆங்கிலேயர் ஆட்சியை வேரறுக்கும் சுதந்திர உணர்ச்சியுடைய ஊர்மக்களின் மன ஒற்றுமையும் ஐயருக்கு உதவியது. பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவிலே மட்டுமன்று, லண்டன் மாநகரிலேயும் பலதடவை ஏமாற வைத்த சுதந்திரப் போராளி வ.வே.சு. ஐயர். அத்தகைய ஒரு வீர, தீரரின் செயல்களை, வரலாற்றை, அவரது எண்ணங்களை அடுத்து வரும் அத்தியாயங்களிலே படிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/11&oldid=1080556" இலிருந்து மீள்விக்கப்பட்டது