பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

வ.வே.சு.ஐயர்


இலண்டன் மாநகர் நோக்கி ஒரு கும்பல் புறப்பட்டது. பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றுவதற்காக! துரோகிகள் யார்யார் என்று பட்டியலிட்டுக் கொண்டு அவரவர் முகவரிகளுடன் அந்தக் கும்பல் லண்டன் சென்றது கப்பலில்!

எந்தக் கர்சான் வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிளந்தானோ, அவனையே இரண்டாகப் பிளக்க இந்திய இளைஞர் குழு இரண்டு மூன்றாகப் பிரிந்து பழிப்பணியிலே இறங்கியது! அந்தக் குழுக்களிலே ஒன்றுதான், வைசிராய் கர்சான் பிரபு ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றபோது அவர்மீதே வெடி குண்டை வீசியது தலை தப்பினால் போதும் என்று கர்சான் ஓடி ஒளிந்து கொண்டான்! அப்போதும் அவரை வாலிபர் பட்டாளம் விடவில்லை! அவர்கள் வெளியே காத்துக் கொண்டிருந்தபோது போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டு விட்டதால் கர்சான் உயிர்தப்பி ஓடினான்!

பயங்கரச் செயல்களில் இவ்வாறு ஈடுபட்ட வாலிபர்கள் மீது பிரிட்டிஷ் அரசு பயங்கரவாதிகள் என்ற பட்டத்தைச் சூட்டி அவர்களைப் பிடிக்க சட்டங்களை ஆயுதங்களாக்கி வைத்துக் கொண்டு காத்திருந்தது. அல்லும் பகலும் இந்தப் பயங்கரவாதிகள் எங்கே தங்களது உயிரைப் பழிவாங்கி விடுவார்களோ என்று பயந்தபடியே பல வெள்ளையர் குடும்பம் குடல் நடுங்கி விழித்தபடியே இருந்தது-அவரவர் வீடுகளில் இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் பாதுகாப்புக் கொடுப்பதே அப்போதைய அரசுக்குரிய வேலையாக இருந்தது.

வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிளந்து விட்டால், வங்காளிகளின் சுதந்திர தேசிய உணர்ச்சியை அடக்கி அழித்துவிட முடியும் என்று எண்ணிச் செயல்பட்ட கர்சான் ஆட்சியின் வெறிப்பணி, குளிக்கக் குளத்திலே இறங்கியவன் சேறாபிஷேகக் கோலத்தோடு வெளியே வந்த விகார கோர வடிவமாகத் திகழ்ந்து விட்டது. இதுதான் வங்காளப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/16&oldid=1080639" இலிருந்து மீள்விக்கப்பட்டது