பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

15


நிலையாக இருந்தது. இந்திய வாலிபர்களின் சுதந்திரப் போராட்டச் செயல்கள் எல்லாம் பயங்கரவாதம் என்ற பெயரில் இங்கிலாந்து நாடு முழுவதும் பரவி விட்டன. பிரிட்டிஷ் அரசு தனது சொந்த இனத் தற்காப்புக்காக இந்தச் செயலைக் காட்டுத் தீயைப் போல பரவ இடம் கொடுத்து விட்டது.

வங்காளத்தில் மட்டுமா இந்தத் தீவிரவாத தேச பக்தி தோன்றியது? கர்சான் பிரபு எங்கே தோன்றி ஆடிப்பாடிக் கல்வி கற்று சுகபோக வாழ்வு கண்டு அரசு ஆட்சிப் பணியை ஏற்றானோ. அந்த மண் முழுவதும் பயங்கரவாதப் பீடபூமிபோலவே திகழ்ந்து வந்தது. லண்டன் மாநகரிலும் பயங்கர வாதம் படுவேகமாகவே பரவியது எனலாம்.

இந்தியாவிலே இருந்து பாரிஸ்டர் படிப்புப் படிக்க லண்டன் மாநகர் சென்றவர்களும், பல்வேறு விவகாரங்களுக்காக லண்டன் சென்றவர்களும், லண்டன் சென்றவுடன் பயங்கரவாதிகளாகவே மாறிவிட்டார்கள். வன்முறை ஒன்றைத் தவிர வேறு வழியே கிடையாது இந்தியா தனது சுதந்தரத்தைப் பெற்றிட என்பதை, இந்திய இளைஞர்கள் நம்பினார்கள். இவர்கள் எல்லாரும் லண்டனிலே உள்ள இந்தியா விடுதி என்ற கட்டடத்திலே தங்கலானார்கள்.

இலண்டன் மாநகரிலே உள்ள "இந்தியா விடுதி" என்ற உணவு விடுதியில், இந்தியாவிலே இருந்து கல்வி கற்கவோ,வேறு பணிகள் காரணமாகவோ வருபவர்கள் எல்லாரும் தங்கி அவரவர் பணிகளைப் பார்ப்பார்கள். அதனால், அங்கு தங்குவோர் அனைவரும் ஒருவர்க்கு ஒருவர் அறிமுகமாகி, இந்திய விடுதலைப் போர் பற்றிய முழு விவரங்களை உணர்ந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்வார்கள். அந்த விடுதிக்குள் சுதந்திர் இந்தியா என்ற நிறுவனத்தை இந்திய வாலிபர்கள் துவக்கி நடத்தி வந்தார்கள்.

அந்த இந்தியா விடுதியிலேயும் சரி, 'சுதந்திர இந்தியா' நிறுவனத்திலும் சரி, இந்தியாவை வன்முறையில் எவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/17&oldid=1080644" இலிருந்து மீள்விக்கப்பட்டது