பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

17


மிகுந்த பாதுகாப்புடனும், கவனத்துடனும் எதையும் செய்யப் பழகிவிட்ட இந்திய வாலிபர்களை ரகசியப் போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்படியே இலண்டன் இரகசியப் போலீசாரும் இந்திய இளைஞர்களும் இருவரில் ஒருவர் எப்போது சிக்குவார்கள்; பழிதீர்த்துக் கொள்ளலாம் என்ற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தார்கள்.

இந்த நேரத்தில், இங்கிலீஷ்காரர்களை எல்லாம், பொதுவாக இங்கிலாந்து நாட்டு மக்களை எல்லாம், குறிப்பாக் லண்டன் மாநகரத்து ஆங்கிலேயர்களுக்குகெல்லாம் ஏன் பிரிட்டிஷ் ஆட்சிக்கே அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்தது.

மதன்லால் திங்க்ரா என்ற இந்திய தீவிரவாத இளைஞன், லண்டன் மாநகரிலே இரண்டு மூன்று மாதங்களாகத் தங்கியிருந்தான் இந்திய சுதந்திரத்தை வன்முறைகளால் பெறமுடியும் என்ற குறிக்கோளை உடையவன் அவன். வங்கத்தை இரண்டாகப் பிளந்தானே கர்சான் பிரபு, அவனுக்குக் கைக்கூலியாக எடுபிடியாக, ஆள் காட்டியாக, லார்டு கர்சானின் ஆணவக்குரலை இந்தியர் மேல் திணித்து அமுல் படுத்தும் அதிகாரி ஏவலாளராக இருந்த கர்ஸான் வைலி, லால்காக்கா என்ற இரண்டு வெள்ளைக்காரர்களை, அவர்கள் பணி ஓய்வு பெற்று லண்டன் திரும்பிய சூட்டோடு சூடாக மதன்லால் திங்க்ரா துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டான்.

அந்த வெள்ளைக்கார அதிகாரிகள் இருவரும், இந்தியாவிலே கர்ஸான் ஆலோசகர்களாக இருந்து இந்திய மக்களுக்கு எண்ணிலாத தீமைகளைச் செய்தவர்கள். அவர்களை எப்படியும் சுட்டுக் கொல்வது என்ற குறிக்கோளுடன் மதன்லால் திங்க்ரா லண்டனிலே தங்கி இருந்தான். அந்த ஆங்கிலேயர்களைச் சுட்டுக் கொன்ற மதன்லால் திங்க்ராவை, லண்டன் போலீஸ் கைது செய்து சிறையிலே அடைத்தது.

வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. மராட்டிய சிங்கம், பாரிஸ்டர் படிப்புப் படித்துத் தேர்வு பெற்றுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/19&oldid=1080718" இலிருந்து மீள்விக்கப்பட்டது