பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தீரம் செறிந்த திருச்சி நகர் தியாகி

திருச்சிராப் பள்ளி என்றழைக்கப்படும் திருச்சி மாநகர் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஒரு சிறப்பான நகரமாகும். இந்நகரைக் கற்றார் திரிசிரபுரம் என்றும் சுருக்கமாகத் திருச்சி நகர் என்றும் அழைப்பார்கள்!

காவிரி நதி இந் நகரில் பாய்ந்தோடுவதால், இந்த மாவட்டம் முழுவதுமே வளம் கொழிக்கும் பகுதிகளாகக் காட்சி தரும். உணவு தந்து உடலோம்பும் உழவர்களும் உணர்வு, தந்து உயிரோம்பும் மன்னர்கள் சிலரும் ஆண்ட பகுதி.

எல்லாவற்றுக்கும் மேலாக, பிறவா யாக்கைப் பெரியோன் எனப்படும் சிவசக்தி நாயகனான சிவபெருமான் திருக்கோயிலான திருவானைக்கா மற்றும் திருவரங்கத்திற்கு எதிர்க்கரையில், காவிரி நதி பாயும் தென்கரையில் இந்தத் திருச்சி மாநகர் அமைந்துள்ளது. இந்த அழகுவளம் கொழிக்கும் நகர் நடுவில் வானளாவி நிற்கும் தாயுமானார் சுவாமி திருக்கோயிலின் திருக்கோலமும், அதன் உச்சியில் பல்லவ மாமன்னது மகுடம் போல் பொலிவுதரும் உச்சிப்பிள்ளையார் கோயிலும், அங்கு வாழ் மக்களின் மதிவளத்தையும், மன நலத்தையும் எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன எனலாம்.

காவிரி நதியின் வடகரையில் திருவரங்கம் எனப்படும்ப ஶ்ரீரங்கம் கோவிலும், திருவானைக்கா என்ற சிவனார் திருக்கோயிலும் தெய்வமணம் வீசி பக்தர்கள் மனம் குளிர்விப்பதை இன்றும் பார்த்து ஆன்ம நேயம் பெறலாம். அது போலவே, வரலாற்றுச் சிறப்புடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/23&oldid=1080727" இலிருந்து மீள்விக்கப்பட்டது