பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வ.வே.சு.ஐயர்


பள்ளிப்படிப்பைப் படித்தவன் என்ன ஊதியம் பெறுகிறானோ, அதைத்தானே காண்வெண்டானும் பெறுகிறான்? ஏன் இதைச் சிந்திக்க மறுக்கிறார்கள்? அவ்வளவு அந்நிய மொழி மோகம் அதனாலே அது அவர்களது சிந்தனையை முடக்கிவிட்டது போலும்!

தாய்மொழி தமிழுக்குத் துரோகம் செய்யும் ஒரு கூட்டம், 19-ம் நூற்றாண்டிலேயும் இருந்தது. அதனால்தான் அப்போதைய வயிறு கள் ஆங்கிலக் கல்வியைக் கற்க மோதின. அந்தச் சூழ்நிலையிலேதான் சுப்பிரமணியனும் ஆங்கிலக் கல்வி கற்க வேண்டும் என்று அவரது தந்தையும் பேராசைப்பட்டார்!

ஆரம்பப் பள்ளிக் கல்வியிலிருந்தே தனது மகன் சிறந்து விளங்க வேண்டும் என்று தந்தை எண்ணினார். அதனால், தனது வீட்டிலேயே ஆங்கிலம் கற்பிக்க மகனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் அவர் செய்தார் ஒர் ஆங்கில ஆசிரியர் வேங்கடேச ஐயர் வீட்டுக்கு வருவார். சுப்பிரமணியத்துக்கு இங்கிலீஷ் போதிப்பார். சிறுவரான சுப்பிரமணியன் படிப்பில் சிறந்து விளங்கினார். தந்தையார் ஆசைக்கு ஏற்றவாறு மகன் இங்கிலீஷ் மொழியிலே ஒப்புயர்வற்ற மணிபோல மதிப்புப் பெற்றார் உடனே ஐயர் தனது மகனைத் திருச்சியிலே உள்ள ஆங்கில மிஷனரிப் பள்ளியிலே. ஐரோப்பிய முறைப்படிகல்வி கற்க அனுப்பினார்.

வீட்டிலேயே சுப்பிரமணியன் ஆங்கில மொழிக் கல்வி, கற்றதால், மிஷனரி கல்வி அவருக்குச் சுலபமாக இருந்தது. அதனால், எல்லாப் பாடங்களிலும் சிறந்த மாணவராக அவரால் கற்க முடிந்தது. வகுப்பிலும் நற்பெயரோடு நல்ல ஒழுக்க சீலமோடு கல்வி கற்றிடும் மாணவராகத் திகழ முடிந்தது.

ஆங்கிலேயர்கள் தமது தாய்மொழியான இங்கிலீஷக்கு அடுத்தபடியாக லத்தீன் மொழிக்கு நல்ல மதிப்பளித்தார்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/26&oldid=1080732" இலிருந்து மீள்விக்கப்பட்டது