பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வ.வே.சு. ஐயர் பாரிஸ்டராக இரங்கூன், லண்டன் பயணம்!

வேங்கடேச ஐயர் தனது மகன் சுப்பிரமணியத்தை ஆங்கிலக் கான்வெண்டில் படிக்க வைத்து, வழக்குரைஞராக்கியும் கூட, அவருக்குக் குடும்பத்தை நடத்துமளவுக்குப் போதிய வருமானம் வில்லை. அதனால், தனது சட்டத்துறைச் செயலை எவ்வாறு விருத்தி செய்வது என்பதிலேயே சிந்தனையைச் செலுத்தி வந்தார். மேற்கொண்டு என்ன செய்தால் தனது தொழில் முன்னேறும் என்ற முயற்சிகளிலே அவர் ஈடுபட்டிருந்தார்.

அந்த நேரத்தில் சுப்பிரமணியனின், இலலத்தரசி பாக்கிய லட்சுமிக்கு பர்மாவில் ஒரு பெரியப்பா இருந்தார்! அவர் அங்கே உண்டியல் கடை ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு மகன் ஒருவர்! பெயர் பசுபதி! மிகவும் வசதியான குடும்பமும் கூட பணம் சொத்து ஏராளமாக இருந்தது பசுபதிக்கு.

பசுபதி நல்ல பணம் உடையவர் மட்டுமல்லர்; நல்ல மனம் படைத்த குணவான்! பரோபகாரி! யாரானாலும் சரி, வித்தியாசம் ஏதும் பாராமல் ஆபத்துக் காலத்தில் உதவி செய்வதில் தாராள மனம் படைத்த மனிதநேயமுள்ளவர்! பசுபதி தனது சிற்றப்பாவின் குடும்பத்தின் மீது சிறுவயலிருந்தே அன்பு பூண்டவராக இருப்பவர்! தங்கை பாக்யலட்சுமி மீதும் அளவிலா பற்றுடையவர் பசுபதி!

பர்மா நாட்டின் தலைநகரான ரங்கூனில் இருந்து தனது சொந்த ஊரான திருச்சிராப்பள்ளி நகருக்கு அந்த பசுபதி வந்தார். வந்தவரை வேங்கடேச ஐயரும் காமாட்சி அம்மையாரும், சுப்பிரமணியனும், அன்போடு வரவேற்று உபசரித்தனர்! பசுபதிக்குப் பிறந்த ஊர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/32&oldid=1081586" இலிருந்து மீள்விக்கப்பட்டது