பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

31


அல்லவா வரகநேரி? அதனால், தங்கை, மைத்துனர் உபசரிப்பிலேயே சில நாட்கள் தங்கி மகிழ்ந்திருந்தார்.

இவ்வாறு அவர் தனது தங்கை வீட்டில் தங்கியிருந்தபோது, சுப்பிரமணியனுடைய வழக்குரைஞர் தொழில் நிலையைத் தாமே நேரில் பார்த்தார்! இவ்வளவு திறமையுள்ள தனது மைத்துனர் முன்னேற நாம் ஏதாவது செய்தால் என்ன என்று சிந்தித்தவாறே இருந்தார் ஒன்றும் அவருக்குப் புலப்படவில்லை.

மைத்துனர் சுப்பிரமணியத்தையும், தங்கை பாக்யலட்சுமியையும் ரங்கூன் நகருக்குத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் வழக்குரைஞர் தொழிலையே நடத்தச் செய்யலாம் என்று தீர்மானித்து தனது சிற்றப்பா, சித்தியிடமும் தங்கையிடமும், மைத்துனரிடமும் விவரித்துக் கூறினார்.

பசுபதியின் திட்டம், தங்கைக்கும், மைத்துனருக்கும் பிடித்திருந்தது. என்றாலும், தனது தகப்பனாரும் தாயாரும் என்ன சொல்வார்களோ என்று சுப்பிரமணியம் மெளனமாக நின்றார்! ஆனால், சிற்றப்பாவுக்கோ, சித்திக்கோ இந்தத் திட்டம் திருப்தியைக் கொடுக்கவில்லை. காரணம், வயதான காலத்தில் பிள்ளையையும் மருமகளையும் பிரிந்திருக்க மனம் இல்லை. அதனாலே, அவர்களும் மெளனமாக இருந்தார்கள்.

பசுபதியே தனது சிற்றப்பாவைக் கேட்டார். அதற்கு வேங்கடேச ஐயர், “மைத்துனன் தயவில் மகன் வாழ்வதை விரும்பவில்லை. மகனும், மகளும் தங்களுடன்தான் இருக்கவேண்டும். அதே நேரத்தில் நாங்களும் அங்கே வந்து தங்க முடியாது என்ற திட்டத்தில், தனது அண்ணன் மகளிடம் வேங்கடேச ஐயர் இந்தப் பிரச்சினையை பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று சமாதானப் பதில் கூறினார்!

சுப்பிரமணியத்துக்கும், பாக்கியலட்சுமிக்கும் பசுபதி யோசனை மிகவும் பிடித்திருந்தது. வழக்குரைஞர் தொழிலில் திருச்சியில்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/33&oldid=1081587" இலிருந்து மீள்விக்கப்பட்டது