பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

33


சுப்பிரமணியத்தைத் தனக்கு உதவியாளராக நியமித்துக் கொண்டார் பாரிஸ்டர்!

என்னென்ன நெளிவு சுளிவுகள் வழக்குரைஞர் தொழிலுக்குண்டோ, அவற்றை எல்லாம் சுப்பிரமணியம் நுட்பத்துடன் புரிந்து கொள்ளத் தக்க உதவிகளைச் செய்து தந்தார்.

பாரிஸ்டரின் உதவிகளுக்கு எல்லாம் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொண்ட சுப்பிரமணியம், உருது மொழியையும் கற்றுத் தேர்ந்தார்.

எப்போதும், பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து தங்களது சுயநல நோக்கத்தைச் சாதித்துக் கொள்பவர்கள் என்பதுதான் ஆங்கிலேயர்களின் ராஜதந்திர வரலாறாகும். இந்திய வரலாறும், உலக சரித்திரமும், இங்கிலாந்து நாட்டின் உள்வரலாறுகளையும் ஊன்றிப் படிப்பவர்கள் இந்த உண்மையை நன்கு உணர்வார்கள்!

ஆங்கிலேயர்கள் தந்திர சாலிகள் என்று பெயர் பெற்றவர்களாவர். அவர்கள் உலகில் பலநாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சி புரிந்தவர்கள். அதனால்தான் மாபெரும் ராஜ தந்திரியான வின்ஸ்டண்ட் சர்ச்சில், பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் சூரியனே மறையாது, என்று ஆணவத்துடன், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முழக்கமிட்டார். இந்தக் கோலாகல ராஜ வாழ்வு அவர்களுக்கு எப்படி வந்தது? எடுத்துக்காட்டுக்கு ஒன்றைப் பார்ப்போம்!

இங்கிலீஷ்காரர்கள் ஆட்சி புரிந்த அக்காலத்தில் வழக்கறிஞர்களுக்குள் இரண்டு பிரிவுகளை உருவாக்கி விட்டார்கள். அதாவது, அடிமைப்பட்டிருந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள், சட்டக் கல்வி பெற்று வழக்கறிஞர்கள் ஆவதற்கு அந்தந்த நாடுகளில் சட்டக் கல்லூரிகளை இங்கிலீஷ்காரர்கள் உருவாக்கி இருந்தார்கள். அக்கல்லூரிகளில் சட்டம் படித்துப் பட்டம் பெற்று வழக்குரைஞர் பணியாற்றுபவர்கள் உயர் நீதி மன்றங்களில் நீதிக்காக வாதாட முடியாது. வழக்குரைஞர் தொழிலும் செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/35&oldid=1082599" இலிருந்து மீள்விக்கப்பட்டது