பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

35


லாபத்தை சுப்பிரமணியன் தனது செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பசுபதியின் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தை தங்கை புருஷனிடம் பசுபதி கூறியதும், சுப்பிரமணியமும் இதுதான் மிகச் சிறந்தவழி என்று மைத்துனர் கருத்தை ஏற்றுக் கொண்டார். பசுபதி முடிவின்படி லண்டனில் உண்டியல் கடை துவங்க எல்லா ஏற்பாடுகளையும் அவர் செய்து முடித்துவிட்டார்.

வராகநேரி வேங்கடேச ஐயருடைய மகனான சுப்பிரமணியம் ஐயர் அதாவது வ.வே.சு.ஐயர் பாரிஸ்டர் பட்டம் பெற்றிட லண்டன் மாநகருக்குப் புறப்பட்டார். அவர் தனது அருமை மனைவி பாக்கிய லட்சுமியையும், அன்பு மகள் பட்டம்மாவையும் மைத்துனர் பசுபதி ஐயரின் பொறுப்பில் ரங்கூன் நகரிலே விட்டு விட்டு லண்டன் சென்றார்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/37&oldid=1082601" இலிருந்து மீள்விக்கப்பட்டது