பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வ.வே.சு.ஐயர்


மாறிவிட்டார்கள். வெள்ளையர்கள் இந்தியாவிலே இருந்தாலும் சரி, லண்டனிலே இருந்தாலும் சரி, அவர்களது இனத்தின் வேரை அறுத்தெறியப் பலாத்கார முறைகளைப் பயன்படுத்தி, யார்யார் வங்கப் பிரிவினைக்கு காரணகர்தர்களாக இருந்தார்களோ, அவர்களை எல்லாம் ஒவ்வொருவராகச் சுட்டுப் பிணமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

இந்தப் பயங்கரவாத சுதந்திரப் போர் உணர்வுகளுக்குத் தளபதிபோல் விளங்கினார். மராட்டிய மாவீரரான விநாயக ராவ் சாவர்கர். அவர் மராட்டியத்திலே உள்ள நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த பகூர் என்ற சிற்றூரிலே பிறந்தவர். இளம்பிராயத்திலேயே அவர் தேசப்பற்று மிக்க வீர இளைஞராகத் திகழ்ந்தார். பள்ளிப் பருவத்திலேயே நாட்டுப்பற்றைக் கவிதைக்களாக்கி, ஊரிலே உள்ள வாலிபர்களை எல்லாம் ஒன்று திரட்டி சுதந்திர உணர்வுப் பாடல்களைப் பாடிப் பஜனை செய்து கொண்டு ஊர்வலம் வருமளவுக்கு நாட்டுப் பற்றாளராக நடமாடியவர். அவரது வீர சுதந்திர உணர்ச்சிகளை லோகமான்ய பாலகங்காதர திலகரே பார்த்து, அவரும் ஆவேசத்துடன் சாவர்கர் கூட்டத்திலே கலந்து கொண்டு வீர முழக்கமிட்டார்!

திலகரை பிரிட்டிஷ் அரசு நாடுகடத்தி தண்டனை கொடுத்ததைப் பத்திரிக்கையிலே படித்த சாவர்கர், வெள்ளையரை இந்தியாவிலே இருந்து ஓட ஓட விரட்டிட வன்முறைதான், பலாத்காரம் தான் சரியான வழி என்ற தவறான கருத்தை ஏற்றுக்கொண்டார்.

மராட்டிய மாவீரன் சிவாஜியைக் குருவாக ஏற்றுக் கொண்ட சாவர்கர், தனது குல தெயவமான பவானிகோயிலுக்குச் சென்று. "என் தாய் நாட்டை, இந்தியாவை வெள்ளையர் ஆட்சியிலே இருந்து விடுவிப்பேன். அதற்காக, எனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் பலிகொடுப்பேன்! இந்தியாவைப் பிரிட்டிஷாரிடம் இருந்து மீட்டிட, அதற்காக எந்த வழியையும் ஏற்றுக் கொண்டு போராடுவேன். இந்தியாவின் முன்னேற்றத்துக்காவே உழைத்துச் சாவேன்" என்று தனது குலதெய்வம் முன்பு சத்தியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/40&oldid=1082605" இலிருந்து மீள்விக்கப்பட்டது