பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

41


இலண்டன் நகரிலே சாவர்கரின் அபிநவ பாரத் சங்கத்தின் கிளை உருவானது. அங்கே இருந்த நண்பர்கள் அந்தச் சங்கத்தின் உறுப்பினரானார்கள். அதனால், அவர்கள் புதியதோர் நாட்டுணர்ச்சி கொண்டு எழுச்சியுடன் செயல்பட்டார்கள். அந்தக் கிளைச் சங்கத்தில் கூடும் நண்பர்கள் இடையே, இந்தியாவிலே இருக்கும் வெள்ளையர்களை எப்படி அதற்றலாம், அதற்கான வழிகள் எவை என்பன போன்ற வாதப் பிரதிவாதங்கள் நடத்தப்பட்டன்.

'அபிநவ பாரத் சங்கத்திற்குரிய உண்மையான பெயர் சுதந்திர இந்தியச் சங்கம்' என்பதாகும். லண்டனில் உள்ள எல்லாத் தரப்பினருக்கும் சுதந்திர இந்தியச் சங்கம் என்ற ஒன்று இருப்பதுதான் தெரியும். அச் சங்கத்துள்ளே நடமாடும் ரகசிய வன்முறைகளை அமல்படுத்துவது அபிநவபாரத் சங்கம்தான்.

சாவர்கர் பம்பாய் நகரிலே எப்படிச் செயல்பட்டார் என்பது பிரிட்டிஷ் அரசுக்கும், இந்திய விடுதியில் ஓரிருவருக்கும், பத்திரிக்கை சிலவற்றுக்கும் நன்கு தெரியும். அதனால், லண்டன் அரசு சாவர்கர் மீது எச்சரிக்கையுடன் செயல்பட்டது. சாவர்கர் இந்திய விடுதியில் என்று தங்க ஆரம்பித்தாரோ, அன்று முதல் அந்த விடுதி உற்சாகமாகவும் உணர்ச்சி வடிவமாகவும காட்சியளித்தது. இதனை நன்குணர்ந்த பிரிட்டிஷ் ரகசியப் போலீஸ் அந்த விடுதியைக் கண்காணித்து வந்தது. பத்திரிக்கைகள் சிலவும், பாரிஸ்டர் படிக்க வந்த சாவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டி எழுதின. சாவர்கர் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன்னுடைய கடமையிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்து செயல்பட்டு வந்தார்.

முதல் சுதந்திரப் போர் என்று இந்திய வரலாற்றுப் பேராசிரியர்களால் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்ச்சியை, சிப்பாய் கலகம் என்று கூறி அதை ஒரு புரட்சியல்ல என்று அடையாளம் காட்டியது பிரிட்டிஷ் அரசு. இந்த முதல் சுதந்திரப்போர், அதாவது சிப்பாய் கலகம் 1857-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தச் சம்பவம் நடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/43&oldid=1082608" இலிருந்து மீள்விக்கப்பட்டது