பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

45


படுத்த மாட்டார்களோ, அவர்கள் தான் இந்தியா விடுதியிலே தங்குவார்கள்.

அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் வ.வே.சு. ஐயர், விநாயகராவ் சாவர்கர், டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் ஆகியோர் ஆவர். இவர்களுள் சாவர்கர் மராட்டியர், மற்ற இருவர்களும் திருச்சி மாநகரைச் சேர்ந்த தமிழர்களாவர்! வ.வே.சு. ஐயர் எதிலும் முனைப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பவர்! மராட்டியர் எல்லாவற்றுக்கும் விளை நிலமாக விளங்குபவர் என்றால் மிகையன்று!

துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டு வீசுதல், துப்பறிதல், துணிகரமாக எச்செயலிலும் ஈடுபட்டுச் செய்தல் போன்ற செயல்களைச் செய்வதற்குப் பயிற்சி பெற்றால் தானே ஒரு புரட்சி இயக்கத்தை நடத்த முடியும்? வாய்கிழியப் புரட்சி புரட்சி என்று கூறிவிட்டால் போதுமா? ஆனால் மேற்கண்ட செயல்களிலே பயிற்சி பெற்றவர்களே இந்தியா விடுதியிலே தங்கியிருந்த இளைஞர்கள்.

அவர்களுள் மிகவும் குறிப்பிடத் தக்கவர் வ.வே.சு.ஐயர்! துப்பாக்கி சுடும் பயிற்சியிலே நிபுணராவதற்காக ஐயர், பாரீஸ் நகரமே சென்று வந்தார். அத்தோடு நின்றாரா அவர்? பாரீஸ் நகரிலே இருந்து ஏராளமான துப்பாக்கிகளை வாங்கி, பம்பாயிலே உள்ள அபிநவபாரத் சங்கத்திற்கு அனுப்பினார்!

இங்கிலாந்திலும், இந்தியாவிலும் புரட்சியை உருவாக்குவதற்காக வ.வே.சு.ஐயரும், அவரது நண்பர்களும் பல ரகசியத் திட்டங்களைப் போட்டு வந்தார்கள். அவற்றை கைப்பற்றிட பிரிட்டிஷ் ரகசியப் போலீசார் எவ்வளவோ முயன்று பார்த்தும் முடியவில்லை.

இந்த மாதிரியே ஏமாற்றங்கள் சிலவற்றைச் சந்தித்த லண்டன் போலீஸ். இந்தியா விடுதிக்குள்ளேயே எட்டப்பன், சகுனியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/47&oldid=1082624" இலிருந்து மீள்விக்கப்பட்டது