பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

55


 விட்டுப் போகட்டும்’ என்று நினைத்து, அவரைப் பாத்திரங்களைத் துலக்குமாறும், தண்ணீர் சுமந்து வருமாறும், காய்கறிகளை அரியும் படியும் வேலைகளைக் கொடுத்தார்கள்! அவரும் எல்லா வேலைகளையும் சுறுசுறுப்புடன் ஓய்வின்றிச் செய்தார்.

விருந்து வேலையாக வெளியே சென்றிருந்த வ.வே.சு. ஐயர் சமையல் நடக்கும் இடத்திலே எப்படி வேலை நடக்கின்றது. என்பதைப் பார்க்க வந்தார்! அப்போது தமது வாலிப நண்பர்களுடன் போட்டிப் போட்டு சமையற் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் ஏழை இந்தியர் உடையிலே உள்ளவரைக் கண்டார்! மீண்டும் கூர்ந்து பார்த்தார்!

தனது நண்பர்களிடம் ஒரே கூச்சல் போட்டார் எல்லாரும் திரு திரு வென்று ஐயரைத் திரும்பிப் பார்த்த போது, "நண்பர்களே, நீங்கள் செய்தது. நியாயம்தானா? சிறப்பு விருந்தினரை இவ்வாறு வேலை செய்யச் சொல்லலாமா? அழகா இது? ஐயோ, இவர் தான் நண்பர்களே காந்தியடிகள்! என்று காந்தியண்ணலைச் சுட்டிக் காட்டிப் பதறிக் கதறினார்!

இதைக் கேட்ட இந்திய வாலிபர்கள் திடுக்கிட்டார்கள் உடனே, காந்தியடிகளிடம் வ.வே.சு. ஐயரும், சாவர்கரும், ராஜனும் உட்பட அனைவரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள் தெரியாமல் நடந்துவிட்ட தவறு என்று குரல் தழதழக்கக் கேட்டுக் கொண்டார்கள்.

அப்போது அடிகள் ஐயரையும், மற்ற நண்பர்களையும் பார்த்து, 'நானல்லவா உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்! இந்திய முறை உணவு வழங்குமாறு உங்களுக்குத் தொல்லையை அல்லவா உருவாக்கிவிட்டேன். அது எவ்வளவு பெரிய கஷ்டமான வேலை? அந்தக் கஷ்டமான பணியை உங்கள் மீது சுமத்திச் சிரமப்படுத்திவிட்ட என்னை நீங்கள்தான் மன்னிக்க வேண்டும் என்றார். இவ்வாறு கூறிய அடிகள், தொடர்ந்து சமையல் வேலைகளைச் செய்தார்! ஐயரும், மற்றவர்களும் எவ்வளவோ சொல்லியும் அடிகளார் கேட்கவில்லை. தொடர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/57&oldid=1083380" இலிருந்து மீள்விக்கப்பட்டது