பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வ.வே.சு.ஐயர்


எண்ணத்தையே கைவிட்டு விட்டார். அதற்குப் பதிலாக தேசத் தொண்டில் ஈடுபட்டார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு அரச விசுவாச உறுதி மொழி எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார் ஐயர்; என்பதைக் கேள்விப்பட்ட லண்டன் நகர் ரகசியப் போலீஸ் துறை அவர்மீது சந்தேகப்பட ஆரம்பித்து விட்டது. சந்தேகம் மட்டுமன்று, ஐயருக்குத் தொடர்ந்து தீராத துன்பங்களைக் கொடுக்கத் துவங்கியது. அதனால் ஐயர் போகுமிடங்களிலே எல்லாம் போலீஸ் நிழல் பின் தொடர்ந்தது. ஆனால், ஐயர் இதையெல்லாம் பெருட்படுத்தவில்லை.

வழக்கம் போல சாவர்கரின் அபிநவபாரத் சங்கத் தோடு தொடர்பு வைத்துக் கொண்டு, வ.வே.சு.ஐயர், அவர்களது பணிக்குரிய ஆதரவுகளையும், ஒத்துழைப்புக்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். லண்டன் நகரிலே இருந்து கொண்டு இந்தியாவில் இருந்த பத்திரிகைகளுக்கும், குறிப்பாகத் தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும் கட்டுரை, கதை, கவிதைகளை எழுதி அதன்மூலம் சுதந்திரக் கருத்துக்களுக்கு உணர்ச்சி உருக் கொடுத்து வந்தார் ஐயர்! அவரது கருத்துக்களைப் படித்தவர்கள் நாட்டுப் பற்றுடையவர்கள் ஆனார்கள். மற்ற நாடுகளில் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடி, சுதந்திரம் பெற்ற வரலாறுகளையும் அறிந்தார்கள். அதனால், தமிழ் மக்கள் இடையே சுதந்திர விழிப்புணர்ச்சியையும், மக்களிடையே ஒரு மன எழுச்சியையும் அவரது எழுத்துக்கள் உருவாக்கின. இதையெல்லாம் கூர்ந்து நோக்கி வந்த பிரிட்டிஷ் அரசு ஐயர் மீது கோபாவேசம் கொண்டது.

இந்தியாவிலே அரசப் பிரதிநிதியாக இருந்த கர்சான் பிரபு பற்றிய வெறித்தனச் செயல்களை இதற்கு முன் படித்தீர்கள். இந்தியாவில் அவர் வைசியராயாக இருந்தபோது; அவருக்கு ஆலோசகர்களாக கர்சன் வைலி, லால் காக்கா என்ற இரண்டு வெள்ளையர்கள் இருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/60&oldid=1083475" இலிருந்து மீள்விக்கப்பட்டது