பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

61


நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகள் அவர் முகத்தைக் கிழித்தன. அதனால் ரத்தம் சிந்தியபடியே இருந்தது!

அஞ்சினாரா சாவர்கர்? அதுதான் இல்லை. அந்த இடத்தை விட்டு அசையவுமில்லை. மலை போல நிலை குலையாமல் நின்றார். இழந்தாரா அவர் நிதான்த்தையாவது? அதுவுமில்லை! நின்று கொண்டே தனது எதிர்ப்புக் குரலை இடிபோல் முழக்கமிட்டார். அதுவும் அமைதியாகவே எதிர்த்தார்!

பால்மர் கலப்பினன் விட்ட குத்தைக் கண்ட வ.வே.சு. ஐயர் கொதித்தார்! இடுப்பிலே செருகி வைத்திருந்த துப்பாக்கியை உருவினார் கலப்பினனைச் சுட குறிவைத்தார்! ஐயர் எப்போதும் அவசர உணர்ச்சி வயப்படுபவர் என்பது தெரிந்தவர் சாவர்கர்! அதனால் சாவர்கர் ஐயரின் துப்பாக்கிக் குறியைத் தடுத்துவிட்டார்!

திருமலாச்சாரி என்பவர் சாவர்கள் மீது அளவிலா அன்பு வைத்திருப்பவர். கலப்பினன் சாவர்கரைத் தாக்கியதைக் கண்ட ஆச்சாரியாரும், ஐயரைப் போலவே கொதித்து எழுந்தார். அவர், தான் வைத்திருந்த குறுந்தடியால் அந்தக் கலப்பின பால்மரின் தலையில் ஓங்கி, பலம் கொண்டவரை தாக்கினார்! விழுந்தான்! சுருண்டான்!

இந்த காட்சியைக் கண்ட கூட்டம், பரப்பரப்பான ஆரவாரத்தால் குழம்பியது. சாவர்கரும், அவரது நண்பர்களும் வெடி குண்டுகளை வீசினாலும் வீசுவார்கள், என்ற பீதியால், கூட்டத்திலே இருந்த ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் முண்டியடித்து விழுந்து எழுந்து கூட்டத்தை விட்டு வெளியே ஓடினார்கள்!

போலீஸ் சாவர்கரைப் பிடித்துச் சென்றது; தீர விசாரித்தது; குற்றமேதும் சாவர்கர் மீது இல்லையெனத் தெரிந்து விடுதலை செய்துவிட்டது.

மறுநாள் சாவர்கர், பத்திரிக்கையிலே, நடந்த விவரத்தை எழுதியபோது; “வழக்கு நீதி மன்றத்தில் இருக்கும் போது, அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/63&oldid=1083482" இலிருந்து மீள்விக்கப்பட்டது