பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

65


அதற்குப் பிறகு வ.வே.சு.ஐயர் நேராகப் பாரீஸ்நகர் சென்றார்! அங்கே காமா அம்மையாரைச் சந்தித்தார். இருவரும் கலந்து பேசியே சாவர்கரைத் தப்ப வைக்கும் திட்டத்தைப் போட்டார்கள். இந்திய தேச பக்தர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் தந்தது பிரெஞ்சு நாட்டின் ஆட்சியிலே இருந்த புதுச்சேரி நகரமாகும். அதுபோல லண்டனிலே தங்கியிருந்த தேசபக்தர்களுக்கு பிரெஞ்சு நாட்டின் தலைநகரமான பாரீஸ் நகர் அடைக்கலம் கொடுத்த நகரமாகும்.

பாரீசும் புதுச்சேரியும் இந்திய தேசியச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீடுபேறு போலப் பயன்பட்டது. அந்த நகரங்கள் இல்லையென்றால் எண்ணற்ற சுதந்திரப் போர்வீரர்களை, பிரிட்டிஷ் ஆட்சி அந்தமான் தீவுக்கு அனுப்பி சாகடித்து மண்டோக்கி இருக்கும். எனவே, இந்திய சுதந்திரப் போர் வீரர்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டுத் தேசியவாதிகள் புதுச்சேரியை ஒரு போதும் மறக்க முடியாது. அதற்காக நாம், பிரெஞ்சுப் பேரரசுக்கு எப்போதும் வரலாற்று நன்றியைக் கூறாமல் இருக்க முடியாது.

சாவர்கர் சிறைப்பட்ட பிறகு பிரிட்டிஷ் அரசு இந்திய தேசிய வீரர்களின் பாசறை போல விளங்கிய, லண்டன் இந்தியா விடுதியைக் கலைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியது. சாவர்க்கரைப் பின்பற்றிய தேசபக்தர்களுக்கெல்லாம் தொல்லைகளைக் கொடுப்பதிலும் அக்கறை காட்டியது. எப்படியும் லண்டன் விடுதியிலே உள்ள இந்திய வாலிபர்களின், தீவிரவாதிகளின் பணிகளை அழித்தொழிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டுத் தீவிரமாகச் செயல்பட்டு வந்ததால், அங்கே இருந்த தேச பக்தர்கள் லண்டன் நகரைக் கைவிட்டு, பிரெஞ்சு நாட்டின் பாரீஸ் நகருக்குச் சென்று குடியேறினார்கள்.

இவ்வாறு குடியேறியவர்களில் குறிப்பிடத்தக்கவர் காமா அம்மையார் இவர் ஒரு பார்சி பெண். புகழ்பெற்ற பெரும் பணக்காரர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டவர் பாரீஸ் நகரில் குடியேறுவதற்கு முன்பு அம்மையார் லண்டனிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/67&oldid=1083704" இலிருந்து மீள்விக்கப்பட்டது