பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பிரிட்டிஷ் போலீசைப்
பிணம் ஏமாற்றியது!

பிரெஞ்சு ஆட்சியிலே உள்ள புதுச்சேரி நகருக்கு அருகே சின்ன பாபு சமுத்திரம் என்ற ஊர் அந்த ஊர் பிரிட்டிஷ் ஆட்சிக்கும் பிரெஞ்சு ஆட்சிக்கும் இடையே உள்ள எல்லைக்கோடாக இருந்தது. அந்த ஊருக்கு அருகே பிரெஞ்சு அதிகாரத்துக்கு உட்பட்ட சிறு கிராமத்திலே உள்ள தனது நண்பர் ஒருவரைப் பார்க்க வ.வே.சு.ஐயர் வந்திருந்தார். தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், இதை ஒற்றர்களால் தெரிந்து கொண்ட பிரிட்டிஷ் போலீசார், அந்த வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். இதை வ.வே.சு.ஐயரும் புரிந்து கொண்டார்.

ஐயர் பேசிக் கொண்டிருந்த வீட்டில் அழுகுரல் ஓசை எழுந்தது. கிராமத்துப் பெரியவர்கள் சாவுச் செய்தியைக் கேட்டதும், ஒருவர் பின் ஒருவராக வந்து துக்கம் விசாரித்து விட்டு அந்த வீட்டின் வாசலிலேயே உட்கார்ந்திருந்தார்கள். இதே நேரத்தில் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களும் அங்கே கூடிவிட்டார்கள்.

கூடிய பெண்கள், அவரவர்களுக்குரிய மனக்குறைகளை ஒப்பாரியாகப் பாடி, மாரடித்துக் கொண்டு, ஒருத்தியை ஒருத்தி அவரவர் கைகளால் சங்கிலி போல இணைத்து, பிணத்தின் முன்னாலே சுற்றிச் சுற்றி வட்டமாக நகர்ந்து கொண்டு, கும்பலாக, உட்கார்ந்து கொண்டும், நின்று கொண்டும் அழுது கொண்டும் இருந்தார்கள்.

சவம் இருந்த இடத்திற்கு எதிரே பந்தல் ஒன்று இருந்தது. அப்பந்தலிலே படர்ந்திருந்த பாகற்கொடியிலே காயும் பழங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/7&oldid=1279831" இலிருந்து மீள்விக்கப்பட்டது