பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வ.வே.சு.ஐயர்


புதுச்சேரிக்கு வ.வே.சு.ஐயர் வந்த போது, தமிழ் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகள், அடக்கு முறை வெறிச்சட்ட ஆர்ப்பாட்டங்கள், மிகக் கோரமாகப் பேய்த் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தமையால், தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியார், வங்கம் தந்த ஞானத்தங்கம் அரவிந்த கோஷ், சு.நெல்லையப்பர் போன்ற பல தேசபக்தர்கள் தமிழ் நாட்டைவிட்டுப் புதுச்சேரிக்கு வந்து தங்கி, சுதந்திர தேவிக்குரிய பணிகளைக் கூடிச் செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்களைக் கண்டதும் வ.வே.சு. ஐயருக்கு புதியதோர் சுதந்திர எழுச்சி வேகம் ஏற்பட்டு, நட்புக் கொண்டு, தேசப் பணிகளைச் செய்யலானார். இவர்கள் எல்லாரும் புதுச்சேரி நகரிலே இருந்து செய்யும் சுதந்திரப்போர்ப் பணிகள், தமிழ்நாட்டிலே உள்ள விடுதலைப் போர் வீரர்களுக்கு சர்க்கரைப் பந்தலிலே தேன் மாரி பெய்தது போல இருந்தது.

இந்திய சுதந்திரத்துக்கும், வெள்ளையர் ஆட்சியின் ஆணவத்தை வேரறுப்பதற்கும் பணிபுரியும் தமிழ் நாட்டு இளைஞர்கள் புதுச்சேரி நகர் வந்து, வ.வே.சு. ஐயரிடம் துப்பாக்கி ஏந்திச் சுடும் பயிற்சியைப் பெற்றுச்சென்று கொண்டிருந்தார்கள்.

தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியாரும், வெள்ளையர் ஆட்சியை அகற்றிட, வ.வே.சு. ஐயரிடம் துப்பாக்கி சுடும்பயிற்சியைப் பெற்றார் என்று கூறப்படுகின்றது.

இங்கிலாந்து நாட்டிலே இருந்து தப்பித்து வந்துவிட்ட வ.வே.சு.ஐயர் மீது ஏற்கனவே கோபமும், ஆத்திரமும் அளவுக்கு மீறிப் பெற்றிருந்த பிரிட்டிஷ் ஆட்சி, எப்படியாவது வ.வே.சு. ஐயரை புதுச்சேரியிலே இருந்து பிடித்துவிட வேண்டுமென்ற நோக்கத்திலே இருந்தது.

பிரெஞ்சு ஆட்சியின் பிடியிலே புதுச்சேரி நகர் இருந்ததால், பிரிட்டிஷ் ஆட்சியும், போலீசும் தமிழ் நாட்டுத்தேசபக்தர்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/74&oldid=1083855" இலிருந்து மீள்விக்கப்பட்டது