பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

75


ஒரு முறை, எப்படியும் வ.வே.சு. ஐயரைப் பிடித்து விடுவது என்று பிரிட்டிஷ் அரசு கங்கணம் கட்டிக் கொண்டு, கூலிப்படை களைப் புதுச்சேரியிலேயே அமர்த்திக் கொண்டு பகீரத முயற்சியிலே இறங்கியது.

திடீரென்று ஐயர் தங்கியிருந்த ஓர் இடத்தருகே, “பிடிவிடாதே, விடாதே பிடி” என்ற கூச்சல் கேட்டது. என்ன இது ஒரே கூச்சலாக இருக்கிறதே என்பதைத் தெரிந்து கொள்ள ஐயர் வீதியின் நடுப்பாகத்திலே நின்று கொண்டு கூச்சல் போட்டு ஓடியவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

உடனே அடுத்த ஒரு கூலிப்படை ஓடிவந்து, “இதோ இவன் தான், திருடன், பிடிபிடி, விடாதே பிடி” என்ற கூச்சல்களைப் போட்டுக் கொண்டு ஐயரையும் பிடித்துத் தள்ளித் துக்கியபடியே ஓடினார்கள். அதற்குள் வேறோர் கும்பல் நன்றாக் குடித்துவிட்டுக் போதையில், யார் எவர் என்ற அடையாளம் தெரியாததால், ஐயரைத் துக்கிக் கொண்டு ஓடியவர்களைப் பிடித்து, உதைத்து, விரட்டி விட்டு, என்ன ஏது என்று புரியாத போதையிலே அங்கங்கே நிலை தடுமாறி விழுந்து விட்டார்கள். அதைக் கண்டு ஐயர் அவர்கள் மீது இரக்கப்பட்டு நடுவீதியிலே விழுந்து கிடந்த அவர்கள் ஒவ்வொருவரையும் தூக்கி வீதியின் ஓரத்தில் கிடத்தும் போது, முதலில் துரத்திக் கொண்டு வந்த அக்கூலிக் கும்பல் மீண்டும் போதையேற்றிக் கொண்டு ‘விடாதே பிடி’ ‘விடாதேபிடி’ என்று கோஷம் போட்டுக் கொண்டு வந்ததைக் கண்ட ஐயர், உடனே எழுந்து, இந்தக் குடிகாரர்களிடம் சிக்கி விட்டால், முன்பு போல நம்மை வேறு எங்காவது கடத்திக் கொண்டு போய் வேறோரிடத்திலே தள்ளிவிட்டு ஓடி விடுவார்களோ, இதில் ஏதாவது அரசியல் சதி இருக்குமோ என்று அச்சம் அவருக்கு ஏற்பட்டு விட்டதால், ஐயர் அக்குடிகாரர்களுக்கு முன்னாலே ‘விடாதே பிடி’ என்று ஓசையிட்டபடியே ஓடினார்! ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/77&oldid=1083860" இலிருந்து மீள்விக்கப்பட்டது