பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வ.வே.சு.ஐயர்


குடிகாரர்கள் கலாட்டா போலிருக்கிறதே என்று மக்கள் யாரும் இதற்கு மதிப்பு அளிக்கவில்லை.

வ.வே.சு. ஐயர் இவ்வாறு ஓடிவந்த பாதையிலே ஒரு விநாயகர் கோவில் இருந்தது. வேறுவழி ஏதும் ஐயருக்குப் புலப்படவில்லை. திடீரென அவர் அக்கோயிலுக்குள் புகுந்துகொண்டு, அங்கிருந்த பிள்ளையார் சிலைக்குப் பின்னாலே மறைவாக ஒளிந்து கொண்டார் ஐயரை விரட்டிக் கொண்டு வந்த முதல் கூலிக் கும்பல் ஐயரைக் காணாமையால் வந்த வழியே மீண்டும் போதைக் கூச்சலிட்டுக் கொண்டே ஓடிவிட்டது.

இதைப் போலவே, பிரிட்டிஷ் போலீசார் வேறோர் முறை வ.வே.சு. ஐயரை எப்படியாவது பிடித்துவிடுவது என்று திட்டம் போட்டார்கள்.

அந்தத் திட்டம் எப்படிப்பட்ட திட்டம் என்பதை இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலே படித்திருப்பீர்கள். அந்தப் பிண ஊர்வலம் ஓர் அற்புதமான ராஜதந்திர வியூகம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்! அதையும் இந்தப் புதுச் சேரிப் பிரச்சனையிலே சேர்த்துப் படித்தால், வ.வே.சு.ஐயர் பிரிட்டிஷ் ஆட்சியையும், போலீசையும் எப்படி எல்லாம் ஆட்டிப் படைத்தார் என்ற வீர வரலாறை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஐயரை எப்படியாவது அல்ஜீரியா நாட்டின் போர் முனைக்கு அனுப்பிவிடலாம்; அங்கே போய் செத்துத் தொலையட்டும் என்று பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டது.

எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தது தமிழ் நாட்டுப் பிரிட்டிஷ் போலீஸ் துறை. ஆனால் வ.வே.சு.ஐயர் பிரிட்டனின் பழிவாங்கும் படலத்துக்குப் பலியாகவில்லை. வ.வே.சு.ஐயரிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/78&oldid=1083988" இலிருந்து மீள்விக்கப்பட்டது