பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

77


இந்தப் பிரச்னையிலும் ஆங்கிலேயர் அரசு தோற்று மண்ணையே கவ்வியது!

சுதந்திரப் போராட்டத்துக்காக அரும்பாடுபட்ட எல்லாரையும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வ.வே.சு. ஐயரைப் போலவே அரசியல் வஞ்சத்துக்கு ஆளாக்கி அவர்களது வாழ்க்கைகளையே பூகம்பம் போல பிளந்து விட்டது.

இவ்வாறு, ஆண்டுகள் பல நகர வ.வே.சு. ஐயரின் அரசியல் ஞான முதிர்ச்சி வன்முறை வழிகளால் பாரத நாட்டிற்கு சுதந்திரம் பெறமுடியாது என்பதைத் திட்டவட்டமாய் உணர்த்தியது. காந்தியடிகளாரின் அகிம்சை முறைதான் இந்தயாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் என்பதை உணர்ந்தார்.

வ.வே.சு. ஐயர் மனமாற்றம் கொண்ட நேரத்தில், காந்தியடிகளாரின் சுதந்திரப் போராட்டமுறைகளுக்கு இந்தியாவிலே பலத்த செல்வாக்கு வளர்ந்து மக்கள் வன்முறைகளைக் கைவிட்டு, காந்தியண்ணலின் அகிம்சைப் போராட்டப் பண்பே அறப்போர் மாண்பு என்று நம்பி காந்தியாரின் சொல்வாக்கை பின்பற்றி நடந்தார்கள்.

இதனால், மறப்போர் முறைக்கும், வன்முறை செயற்பாடுகளுக்கும், பலாத்கார உணர்வுகளுக்கும், பலிவாங்கும் பழிச் செயல்கட்டும் மக்கள் இடையே மதிப்பு மங்கி அற்றுவிட்டது என்பதை வ.வே.சு. ஐயர் உணர்ந்தார். அரசியல் விடுதலைக்கு சாத்வீக முறையே சாலச் சிறந்த ஆயுதம் என்பதையும் தனது மனத்தில் பதித்துக் கொண்டு பணிகளைச் செய்து வந்தார்.

1915-ஆம் ஆண்டு, காந்தியடிகள் புதுச்சேரி நகருக்கு வருகை தந்தார். வ.வே.சு. ஐயர் அண்ணலை சந்தித்து. நான் லண்டனில் வன்முறைதான் சிறந்த போராயுதம் என்று வாதிட்டேன். அந்தக் கருத்து இப்போது தோற்றுப் போனதை முற்றிலுமாக உணர்ந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/79&oldid=1083991" இலிருந்து மீள்விக்கப்பட்டது