பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

81


கூறியது நண்பர்கள் குழு. இந்த சிந்தனைக் கருத்து ஐயருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த உயர்ந்த சேவைக்குத் தன்னையே காணிக்கையாக்கிக் கொண்டார்.

இதற்குத் தகுந்த இடம் திருநெல்வேலி மாவட்டத்திலே உள்ள சேரன் மாதேவி என்று தேர்வு செய்து, அங்கே ஓர் ஆசிரமத்தை நிறுவ ஏற்பாடு செய்தார். இந்த ஆஸ்ரமத்துக்குப் பரத்வாசர் ஆசிரமம் என்று பெயர் சூட்டினார் ஐயர்.

இந்த ஆசிரமம் நிறுவுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பத்தாயிரம் ரூபாயை நிதியாக நிர்ணயம் செய்து. அந்த நன்கொடையின் முன்பணமாக ஐயாயிரம் ரூபாய் வழங்கியது. கடல் கடந்த நாடுகளும் ஆசிரமத்துக்கு நிதியை வாரி வழங்கின. இதையெல்லாம் பார்த்த ஐயர் தனது சேவைக்கு மக்களிடம் பெருகிவரும் மதிப்பைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

சேரன் மாதேவியில் ஆசிரமம் ஏற்படுத்துவதற்காக பல ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டது. அந்நிலத்தின் ஒரு பகுதியிலே ஐயர் குருகுலத்தை உருவாக்கினார். ஆசிரமம், அச்சுக்கூடம், ஆசிரம அலுவலகம் ஆகியவற்றுக்கு ஒதுக்கிய நிலம் போக, மற்றப் பகுதி நிலம் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்டது. விவசாயப் பண்ணை நடத்துவதற்கும் அந்த நிலம் பயன்பட்டது. மொத்தத்தில் குருகுலப் பணிகள் எல்லாமே மனநிறைவுடன் நடந்தன.

பரத்வாசர் ஆசிரமத்தில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்விகற்று வந்தார்கள். அந்த ஆசிரமத்தைச் சேர்ந்த குருகுலத்திற்கு ஐயர் தமிழ்நாட்டுக் குருகுலம் என்று பெயரிட்டார். இதிலிருந்தே வ.வே.சு. ஐயரின் தமிழ்ப்பற்றை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. இது அவருக்கிருந்த தணியாத தமிழ்ப்பற்றைக் காட்டுகிறது அல்லவா? இங்கு தமிழ்க் கல்வியும் கற்பிக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/83&oldid=1083998" இலிருந்து மீள்விக்கப்பட்டது