பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

85


தேசியக் கல்வித் திட்டம் என்றால் என்ன? காந்தியடிகள் அதை ஆரம்பித்ததின் நோக்கம் யாது என்பனவற்றை எல்லாம் அவர் ‘தேசபக்தன்’ பத்திரிக்கையில் விளக்கி எழுதி மக்களுக்கு அதன் அருமை பெருமைகளை எடுத்துரைத்தார்.

தமிழ் நாட்டு மாணவ, மாணவியர்களுக்குத் தமிழ் மொழியில் தான், தாய் மொழியில் தான் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற துடிப்போடு எழுதினார் வ.வே.சு. பன்னிரண்டு வயதுக்கு மேல்தான் ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது 'எனது கொள்கை' என்ற தலைப்பில் வ.வே.சு. ஐயர் எழுதி எதிர்கால வாரிசுகளின் பொறுப்பைத் தூண்டிவிட்டார்.

ஐயர் புதுவையிலே வாழ்ந்திருந்த போது, ‘மங்கையர்க் கரசியின் காதல், சந்திர குப்த சக்கரவரத்தியின் சரித்திரம், புக்கர் வாஷிங்டன், தன்னம்பிக்கை, நெப்போலியன், கம்பராமாயணம், பாலகாண்ட உரை’, போன்ற அரும்பெரும் சாதனைகளைச் செய்து காட்டிய அவரது வரலாறு, மொழிபெயர்ப்புப் புலமைகளை இலக்கிய உலகுக்கு சான்றாக உள்ளது.

திருக்குறளையும், குறுந்தொகையையும் அவர் ஆங்கிலத்தில் அற்புதமாக மொழி பெயர்த்துள்ளார். இதன் வாயிலாக தமிழன்னையின் தன்னிகரற்ற பெருமைகளை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.

வ.வே.சு. ஐயர் நடத்தி வந்த தேசபக்தன் பத்திரிகை, தமிழ் மக்களுக்கு அவரது தமிழ்ப் பற்றையும் புலமையையும் எடுத்துக் காட்டுகின்றன. அது ஒரு பல்சுவை பத்திரிக்கையாக தமிழ் மக்கள் இடையே நடமாடியது என்று தலைநிமிர்ந்து கூறலாம்.

‘தேச பக்தன்’ தொடங்கிய நேரத்திலேதான் காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பமானது. காந்தியடிகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/87&oldid=1084003" இலிருந்து மீள்விக்கப்பட்டது