பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வ.வே.சு.ஐயர்


கொள்கைகளை தனது மூளைக்குக் கோபுரச் சிகரம் போல் உயர்த்திக் கொண்ட வ.வே.சு. ஐயர், மக்கள் ஏன் அந்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும? அதனால் வரும் எதிர் கால நன்மைகள் என்னென்ன? என்பனவற்றை எல்லாம் வ.வே.சு. ஐயருக்கே உரிய தமிழில் அற்புதமாக எழுதியதை மக்கள் படித்துப் பின்பற்றி வந்தார்கள். அதனால், அண்ணல் போராட்டத்துக்குரிய ஆதரவும் பெருகியது.

‘தேசபக்தன்’ பத்திரிக்கைப் பலம் காந்தியடிகளது போராட்டத்திற்குப் பெரிய ஆதரவைப் பெருக்கிக் கொண்டே இருப்பதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி, வ.வே.சு. ஐயரைச் சிறையிலே அடைக்கவும், பத்திரிக்கையை நிறுத்திவிடவும் முயற்சி செய்தது.

பத்திரிக்கையின் தலையங்கத்தை எப்போதும் ஆசிரியர்தான் எழுதுவார். ஆனால், வேறு ஒருவர் எழுதிய தலையங்கத்தைப் போலீசார் ஒரு முறைக்கு மும்முறைப் படித்தார்கள். அந்தத் தலையங்கத்தில் அரசுக்கு எதிராக எழுதியிருப்பதாக ஐயர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அந்தத் தலையங்கத்தை ஐயர் எழுதவில்லை என்பது போலீசுக்கும் புரியும். ஆனாலும், அவரைத் தண்டிக்க வேண்டும்; பத்திரிகையை இழுத்து மூடவேண்டும். இதுதானே வெள்ளையர் ஆட்சியின் நோக்கம். அதனால் ஐயர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அந்த வழக்கு நீதிமன்றம் வந்து ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை என்று தீர்ப்புக் கூறப்பட்டது. செய்யாத குற்றத்தைச் செய்ததாக அரசு பொய்வழக்குப் போட்டது. அதன் முடிவு ஒன்பது மாதங்கள் கடுங்காவல்!

வ.வே.சு. ஐயர், அந்த ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க பெல்லாரி சிறைக்கு அனுப்பப்பட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/88&oldid=1084005" இலிருந்து மீள்விக்கப்பட்டது