பக்கம்:ஸ்ரீ ஸச்சிதாநந்த சிவாபிநவ நரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் திவ்யசரிதம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

- டிக்கிறது. இன்னும் இவர் அனுமதியை அனுசரித்து இவர் தர்ம்ம பத்னியால் ஸ்வீகாரம் செய்துகொள்ளப் பட்ட புத்திரரான பாமாசாஸ்திரிகள் என்பவர் பாலியத்திலிருந்தே இந்த இரத்தத்திற்கு விஷயரான ஸ்ரீஸ்வாமிகள் அவர்கள் சன்னிதானத்தில் தர்க்க வேதாந்த - சாஸ்திரங்களை அப்பியாசம் செய்து தங்கள் - பூர்வீகர்களைப் போலவே மைசூர் போம்ஸ்தானத்தில் மகாராஜர்களின்ப்ரீதிக்கும் கவுரவத்திற்கும் பாத்திரராக மைசூர் ஆஸ்தானபண்டிதராயிருந்து கொண்டு கூடியவரையில் தங்கள் குலக்கிரமாசாரங்களை நடத்திக்கொண்டு இந்த பண்டிதர் வம்சத்திற்கு அலங்காரமாக இருந்து வருகிறார்.

சிவஸ்வாமிக்கு 5வது வயதிலேயே மாதுருவி யோகம் எற்பட்டது. மாதாபிதுருக்கள் இருவராலும், பிரிக்கப்பட்ட இந்த பாஸகர் மாதாபிதாக்கள் ஸ்தானத்திலிருந்த ஜ்யேஷ்ட பிராதாலினால், விசேஷமாக அபிமானிக்கப்பட்டு அவருடைய ஆதினத்தில் இருந்து அவரால் விருத்தி செய்யப்பட்டவராயிருந்து வந்தார்.