பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

9



சமஸ்கிருத மொழியிலே எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்திலே தமிழ் நாட்டைச் சேர்ந்த தற்போதைய ஊர்களான முசிறி, திருவெண்காடு, காவிரிப் பூம்பட்டினம், தனுஷ்கோடி, சேது சமுத்திரமும், சங்ககால நகரான கபாடபுரமும் வால்மீகியால் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.

தமிழ் நாட்டுத் துறை முகங்களிலிருந்து முத்து, பொன், மயிலிறகு, மிளகு, சடா மஞ்சி ஆகிய வாசனைப் பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கப்பல்கள், கிரேக்கம், எகிப்து ‘ரோம்’ நாட்டு நகரங்களுக்குச் சென்று வாணிகம் நடத்தியுள்ள குறிப்புக்களை, அகநானூறு, புறநானூறு, சிறு பாணாற்றுப் படை, மதுரைக் காஞ்சி, நற்றினை, பட்டினப்பாலை, கலித்தொகை, மலைபடுகடாம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பண்டையத் தம்ழ் நூல்கள் இன்றும் அறிவித்துக் கொண்டே இருக்கின்றன.

நமது தமிழ் நூல்களது ஆய்வுகள் மட்டுமல்ல; கடற்பயண யாத்திரிகர்களான பிளினி, பெரிப்ளஸ், தாலமி, ஸ்டிராபோ, செனபான், மெகஸ்தனிஸ், அரியன் இண்டிகா போன்ற மேல் நாட்டு அறிஞர்களும், அவர்களது ஆய்வுக் குறிப்புகளும் மேற்கண்டவாறே கூறுகின்றன.

இவற்றால் நாம் அறிவது என்ன? தமிழ்நாட்டுக்கும் மேற்கே உள்ள நாடு நகரங்களுக்கும் இடையே, நீண்ட நெடுங்காலமாகவே, வாணிகம் வழியாக தொடர்பு இருந்தது என்றும், அதனால் தமிழ் மொழிச் சொற்கள், கலைகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் மேல் நாடுகளிலும் பரவியிருந்தன என்பதையும் தெளிவாகவே உணர முடிகின்றது அல்லவா? மேற்கே கிரேக்க நாடு, எகிப்து, கிழக்கே சீனநாடு இம் மூன்று நாடுகளுக்கும் இடையிலே தமிழ் நாடு அமைதிருந்த தட்ப வெட்ப நிலையும் தமிழ்நாட்டின் சிறப்பு அமைப்புக்கு ஒரு காரணமாகும். கடல் கொந்தளிப்பு, மன்னர்களது போர்கள், எரிமலை வெடிப்புக்கள், பூகம்பப் பிளவுகள் அடிக்கடி