பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ஹிராடெடஸின்


என்பவர் கி.பி. 507 - 587 ஆம் ஆண்டில் குப்த சாம்ராச்சியத்தில், ஜோதிட வித்தகராக வாழ்ந்து வந்தார். அவர் எழுதியது ‘பிருகத் சம்ஹிதை’ எனும் சோதிடநூல். வராகமிகிரர் மன்னனது அவையில் ‘ராஜகுமாரனுக்குப் பன்றியினால் மரணம் ஏற்படும்’ என்றார். உடனே மன்னன் ஒரு தீவில் அரண்மனை கட்டி, அதிலே ராஜகுமாரனைப் பாதுகாப்போடு வைத்துக் காப்பாற்றியும் கூட, சோதிட நிபுணர் குறிப்பிட்ட நாளன்று, அரண்மனைச் சுவரின் மீது மாட்டப்பட்டிருந்த களி மண்ணால் செய்த பன்றி உருவை பல்லி அசைத்து, அது குழந்தை தலையிலே விழுந்ததால் குழந்தை மாண்டு விட்டது. இது கற்பனைக் கதைதான் என்றாலும், கிரேக்க நாட்டில் இதுபோன்ற ஒரு கதை இருந்ததை ஹிராடெடஸ் நமக்கு நினைவூட்டுகிறார்.

ஹிராடெடஸ் எழுதிய ‘வரலாறுகள்’ என்ற நூலில் மேற்கண்ட புராணக் கதைகள், நாடோடிப் பாடல்கள், நீதிக் கதைகள், அந்தக் காலத்தின் அறிவியல் கோட்பாடுகள், ஊர்வம்புகள், திண்ணைப் பேச்சுக்கள், புதிய நவீன கதைகள் ஆகியனவெல்லாம் இடம் பெற்றுள்ளன.

இதனால், ஹிராடெடசை ஒரு நேர்மையான வரலாற்று ஆசிரியர் அல்லர் என்று சொல்பவர்களும் அப்போது இருந்தார்கள். ஆனால், அவர் எழுதியுள்ள மேற்கண்ட சம்பவங்களின் உள்ளே புகுந்து உற்று நோக்கிச் சிந்திக்கும் போது, ஹிராடெடஸ் கூறியவை எல்லாம் உலக நாடுகளிலே எங்கெங்கோ நடைபெற்ற சம்பவங்களாக இருக்கின்றன. அதனால் அவர்மீது சிலர் கூறிய குற்றச்சாட்டுக்கள் எல்லாமே தவிடு பொடியாகின்றன.

எடுத்துக்காட்டாக, ஹிராடெடசை நாடுகடத்தப்பட்ட தளபதி என்று கூறும் ஒரு செய்தியும் உண்டு, ஆனால், அவர் எந்த நாட்டிலும் அரசுப் பதவிகளிலோ அல்லது போர் சம்பந்தப்பட்ட பதவிகளிலோ அல்லது போர்க்கள் நிகழ்ச்சிக்களிலோ பணியாற்றியதாக எந்த விதக் குறிப்பும் கிடைக்கவில்லை.