பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

21



மாறாக, ஹிராடெடஸ் தனது ‘வரலாறுகள்’ என்ற அரும் பெரும் நூலை எழுதுவதற்காக உலகத்திலே உள்ள ஊர்களை எல்லாம் சுற்றி நாடோடியாக அலைந்தார்.

ஹிராடெடஸ் தொழில் என்ன தெரியுமா? மக்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவர்களிடம் கதை கூறுவதுதான்; நமக்குக் கவிதை தொழில் என்று சுப்பிரமணிய பாரதியார் கூறியதைப் போல ஆனால், அவர் கூறும் கதைகளில், உண்மையான மனிதர்களின் வீரச் செயல்களும், அவர் சுற்றி வந்த நாடு நகர, பட்டி தொட்டிகளின் வருணனைகளும், அந்தந்த நாடுகளிலே வாழ்ந்த மக்களின் இனங்களும். அவர்களது வாழ்முறைகளுடன் கூடிய நடை, உடை, பண்பாடுகள், பழக்க வழக்கங்களும் நிறைந்து காணப்படுவதைத் தான் நம்மால் காண முடிகின்றது.

அதனால்தான், அவர்காலத்தில் அதாவது கி.மு.471 - 401 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றுப் பேராசிரியரான ‘தூசிடைடிஸ்’ THUCYDIDES என்பவர், ஹிராடெடைசைப் பற்றிக் கருத்துக் கூறும் போது,

“ஹிராடெடஸ் எப்போதெல்லாம் மக்கட் குழுக்களைப் பார்க்கிறாரோ, அப்பொதெல்லாம் ஏதாவது கதைகளைக் கூறிக் கொண்டே இருப்பார். கதைகளைக் கூறும்போது மக்களுடைய முகங்களை உற்றுப் பார்த்தபடியே பேசுவார். ஏன் தெரியுமா?”

“நாம் கூறும் கதைகளைக் கேட்கும் மக்கள் முகமலர்ச்சியுடன் கேட்கிறார்களா? அல்லது முகம் சுளித்துக் கொள்கிறார்களா? கேட்பவர்களுக்கு நாம் கூறும் கதை, களைப்பு, சோர்வுகளைக் கொடுக்கின்றனவா? அல்லது ஆர்வமுடன் கேட்கிறார்களா என்பதை அவர் அறிந்து கொள்ளத்தான் அவர் கதை கூறும் போக்கைக் கடைப்பிடித்தார்.”

“அவர் கூறும் வரலாற்றுச் செய்திகள், கதைகள், எல்லாமே உண்மைகளையே உணர்த்தின. அப்படி ஏதாவது கற்பனைகளைக்