உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

23


கொள்வார். அது உண்மையா? இல்லையா என்று பார்க்கமாட்டார். காரணம், நல்லது என்றால் என்ன பொருள்? உண்மையுடன் சேர்ந்து காணப்படும் கொள்கைகள் அல்லவா? என்று நினைப்பவர் அவர்.

அதனால்தான், அவரது ‘வரலாறுகள்’ என்ற நூலைப் படித்தவர்கள் அவரை வரலாற்றின் ஆதித் தந்தை என்று கூறுகின்றனர். உரைநடையிலே எழுதப்பட்ட முதல் நூல் அவருடைய ‘வரலாறுகள்’ என்பதினாலே, ஹிராடெடஸ் உரைநடையின் ஆதித் தந்தை என்றும், உலக வரலாற்றால் போற்றப்படுகின்றார்.

இத்துடன் மட்டுமன்று; அவருடைய நூல் மதிப்பு. இந்திய நாட்டிற்குப் பெருமை தேடும் வகையில், பிளினி, பெரிப்ளுஸ், மெகஸ்தனிஸ், காலமி, யுவான்-சு-வாங், பாகியான், இத்-சிங், மார்க்க போலோ, கொலம்பஸ் போன்றவர்கள் எல்லாம் இந்தியாவின் பெருமைகளைப் பேசுவதற்கு முன்பே, நூலாக எழுதுவதற்கு முன்பே, ஹிராடெடஸ் ஒருவர்தான் இந்தியாவைப் பற்றிய பெருமைகளை உலகுக்கு எடுத்துக் கூறி உணர்த்தியும் உள்ளார்!

“இந்திய நாட்டின் வாசனைப் பொருட்கள், ஏற்றிக் கொண்டு சென்ற கலங்கள் எகிப்து நாட்டுச் சடலங்களின் துர்நாற்றத்தைப் போக்கியுள்ளன. அந்த பிணம் பாதுகாக்கும் முறைகளையும், இந்தியாவைப் பற்றிய செய்திகளையும் ஹிராடெடஸ் தனது தொகுப்பு நூல்களிலே குறிப்பிட்டிருக்கிறார்.

சிந்து நதி பற்றிய நாகரிகத்தையும், அந் நதியிலே வாழும் பெரிய பெரிய முதலைகளைப் பற்றியும், இந்தியாவிலே உள்ள வர்ணாசிரமகுல மரபுகளைப் குறித்தும், இந்தியமக்கள் என்றால் அப்போதைய சிந்து வெளி நாகரிகத் தமிழர்களின் பண்பாடுகள், நாகரிகங்கள், சிலருடைய ஆச்சர்யமான அங்க அமைப்புகள்,