பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ஹிராடெடஸின்


பொன் அகழும் எறும்புகள், பொன் வாணிகம், கருங்கடல், ஹிராக்ளிஸ், குதிரைகள், யானைகள் வியப்பூட்டும் மக்களின் வாழ்க்கை முறைகள் போன்றவற்றை எல்லாம் விரிவாகவே விளக்கி எழுதி இந்திய தீபகற்ப நாட்டிற்குத் தேடித் தந்த பெரும் பெருமை ஹிராடேடஸ் என்ற சரித்திர ஞானியையே சேரும்.

ஹிராடெடஸ் என்ற கிரேக்க மொழிச்சொல், ஹீரோஸ் அதாவது வீரன் என்ற மரபில் - உருவான சொல்லாகும். அந்த வரலாற்று மாவீரன் எழுதிய ‘வரலாறுகள்’ என்ற நூலிலே உள்ள மற்றச் சுவைகளையும் இனிபார்ப்போம்.


4. பினீசியர்களும் - கிரேக்கர்களும்

‘வரலாறுகள்’ என்ற எனது இந்தப் புத்தகம், வரலாற்றை ஊடுருவி, உண்மைச் செய்திகளை ‘ஊன்றிப் பார்த்து நான் கொடுத்த உருவமாகும். இதில் இரண்டு செயல்களைச் செய்ய எண்ணுகிறேன்.

ஒன்று, கடந்த கால வரலாற்று நிகழ்ச்சிகளைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததிகளின் கவனத்துக்கு அதை எவ்வாறு கொண்டு வருவது. நமது சொந்த நாட்டு மக்கள், ஆசியாக் கண்டத்து மக்கள் ஆகியோரின் வியத்தகு சாதனைகளை ஏடுகளில் எழுதி வைப்பது. மற்றொன்று இனங்கள் எவ்வாறு ஒன்றுக் கொன்று விரோதத்தை வளர்த்துக் கொண்டு, போரில் ஈடுபட்டு அழிந்தன என்பதைக் கூர்மையாக ஆராய்ந்து, அதனதன் நன்மை - தீமைகளை அறிவிப்பது என்பதே இந்த நூலின் நோக்கமாகும்.

இம்மாதிரியான போர்கள், கலகங்கள் உருவாகக் காரணமானவர்கள் பினீசியர்களே - என்று பாரசீக வரலாற்று ஆசிரியர்கள் பீனிசிய மக்கள் மீது பழிபோடுகிறார்கள்.

அப்படியானால், யார் இந்த பீனிசிய மக்கள்? எங்கிருந்து வந்தார்கள்? அவர்களது ஆதி வரலாறுகள் என்ன? இவற்றை