பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

29


இருந்து, தமிழ் நாட்டிலிருந்து, கேரளக் கடற்கரையிலிருந்து கப்பலோட்டிச் சென்ற பழந்தமிழர்கள், பனை மரங்களைத் தாங்கள் சென்ற ஊர்களிலே எல்லாம் பயிரிட்டார்கள். அதன் காரணமாக அவர்களைப் ‘பாமேசியர்’ என்றும், ‘பனேசியர்’ என்றும் இந்தப் பெயரானது நாளடைவில் பினீசியர் என்று பெயரானது. பனையேறியோர் என்றதன் உருவ மரூஉ அதாவது சொல் மரபு வகையில் பினீசியர் என்று அழைக்கப்பட்டார்கள்.

அந்த பனை மரங்கள் ஏறியவர் என்ற சொல்லே - பாமேசியர் என்ற சொல்லே - நாளடைவில் பினீசியர் என்று உருவம் பெற்றது. பனை மரங்களை வளர்த்தவர்கள், பனை மரங்களிலே ஏறுபவர்கள், பனையேறிகள். ‘பனை’க்கும் ‘பினி’க்கும் எவ்வளவு ஓசை ஒற்றுமை நெருங்கி இருக்கிறது பாருங்கள்!

எனவே, பாமேசியர், பனை ஏறியவர் என்ற சொற்களே - நாளாகவாக, பினீசியர் என்ற உருவத்தைப் பெற்றுள்ளது. இதனால் நமக்குப் புலப்படுவது என்னவென்றால், பினீசியா மக்கள் தமிழ் நாட்டிலே இருந்து சென்று அங்கே குடியமைப்புக்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள் என்று புரிகிறது.

இந்தக் கருத்துக்கு ஆதாரமாக, A SMALLER CLASSICAL DICTIONARY; PAGE-405 என்ற நூலில் மேற்கண்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

எகிப்து நாட்டு வரலாற்றில் பினீசியாவைப் பற்றி வேறோர் கருத்துக் கூறப்பட்டுள்ளது. அக்கருத்து இது:

“எகிப்தியர்கள் கப்பல் கட்டுவதற்காகக் கி.மு. 3200 ஆம் ஆண்டின் போது, பினீசியாவிற்குத் தேவதாரு CEDAR மரங்களை வாங்கி வர ஒரு தூதுக்குழுவை அனுப்பினார்கள். அதற்குப் பிறகு கி.மு. 1500 ஆம் ஆண்டில் அப்போது அரசியாக இருந்தவனான ‘ஹட்ஷிப்சட்’ என்பவள், நைல் நதி வழியாகத் தீபே நகரத்திலிருந்து செங்கடலுக்குச் சில கப்பல்களைச் செலுத்தினாள்.