பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

ஹிராடெடஸின்அமெரிக்கக் கண்டத்தை முதன்முதலில் வெபூஸ்கி என்பவரும், பிறகு இரண்டாவதாக கொலம்பசும் கண்டு பிடித்ததாக, இன்று உலகம் பெருமை பேசுகிறது. ஆனால், பினீசிய தமிழர்கள் வட அமெரிக்காவை கி.மு. 800 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடித்துக் குடியேறிவிட்டார்கள். அது மட்டு மன்று தென் அமெரிக்கா அமேசான் நதிக் கழிமுகப் பகுதியை அவர்கள், கி.மு.150 ஆம் ஆண்டிலே கண்டு பிடித்து அங்கேயும் தமிழர்கள் குடியேறி இருக்கிறார்கள் என்று ஹிராடெடஸ் வரலாறுகள் கூறுகிறது என்றால், அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர்கள் யார்? தமிழர்கள் அல்லவா? இந்தச் சம்பத்தை உலக வரலாறு திரையிட்டு மூடி மறைத்துவிட்டது ஏன்? என்ற கேள்வி எழுவது இயற்கைதானே?

தமிழர்களின் அமெரிக்கா

தமிழ் நாட்டிலிருந்து தமிழர்கள் கி.மு. 2500 ஆம் ஆண்டுகளளவில் புறப்பட்டு, அவர்களுள் ஒரு பிரிவினர் கால்நடை வழியாக நிலமார்க்கமாகவும், மற்றொரு குழுவினர் மரக்கலங்கள் மூலமாகக் கடல் வழியாகவும் சென்றார்கள்.

பிறகு இந்த இருபிரிவினர்களும் காம்செட்கா என்ற நகரில் இணைந்து, அங்கே இருந்து கால் நடையாக நடந்து சைபீரிய சமவெளியின் இறுதி முனையிலே உள்ள பேரிங் கடற்கால் வழியாக, வட அமெரிக்காவின் நுழைவாயிலாகவுள்ள அலாஸ்கா தீபகற்பத்தை அடைந்தார்கள். அதற்குப் பிறகு அந்த பூமியின் தட்ப வெட்ப நிலைகளுக்கேற்ற வாறு ஆங்காங்கே குடியேற்றக் கூடாரங்களை அமைத்துக் கொண்டு வட அமெரிக்காவின் இறுதி முனையிலே உள்ள, தென் அமெரிக்காவின் நுழைவாயிலாக அமைந்த மெக்சிகோ நாடு வரை குடியேற்றங்களை நிறுவி வாழ்ந்துள்ளார்கள் என்று, ஹிராடெடஸ் ‘வரலாறு’ கூறுகின்றது.