பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

35


தமிழர்களின் மும்முனைக் குடியேற்றங்கள்!

பினீசியர்கள் தமிழ் நாட்டிற்கு கி.மு. 3000 ஆம் ஆண்டில் வந்த பிறகு, மீண்டும் மூன்று பிரிவினர்கள் தமிழ்நாட்டிலே இருந்த மூன்று மார்க்கங்களில், உலகின் பல பகுதிகளுக்குச் சென்று குடியேறி இருக்கிறார்கள். அவை எவை:

1. தமிழர்கள் அராபிக் கடல் வழியாக, மத்திய தரைக் கடல் பகுதிக்குச் சென்றார்கள். அங்கே இருந்து புறப்பட்டு சீதோன், தீரே துறைமுகங்களை கி.மு. 3000 ஆம் ஆண்டளவில் உருவாக்கினார்கள்.

2. தமிழ் நாட்டிலிருந்து கி.மு. 2500 ஆம் ஆண்டளவில் மற்றொரு பிரிவினர் புறப்பட்டு, கிழக்கு இந்தியத் தீவுகளை அடைந்து, அங்கே இருந்து சீன நாட்டுக்குச் சென்றடைந்து, அதன் பின்னர் பேரிங் ஜல சந்தி வழியாக அலாஸ்கா நிலப்பகுதிக்குச் சென்று, முப்பது மைல் தூரம் அங்கிருந்து பனிப் பாறையில் நடந்து. அங்கிருந்து வட அமெரிக்க மேற்குக் கடற்கரை ஓரமாச் சென்று, வட அமெரிக்காவின் பல இடங்களிலே மெக்சிகோ வரை சென்று குடியேறினார்கள். அதற்குப் பிறகு அமெரிக்காவில் தாங்கள் சென்று வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளமாக, அமெரிக்கா சென்ற தமிழர்கள் ஒரு கல்வெட்டு சாசனத்தைச் செதுக்கி அங்கே நாட்டினார்கள்.

இந்தியப் பிரதமர் நேரு பெருமகனார் 1962 ஆம் ஆண்டுவாக்கில் புதுச்சேரி சென்று இந்தோ பிரெஞ்சு, தமிழ் பண்பாட்டு மையத்தைப் பார்வையிட்ட போது, தஞ்சைக்கு அடுத்த பள்ளியகரம் நகரைச் சேர்ந்த பெரும் புலவர், பண்டித நீ. கந்தசாமி பிள்ளை அவர்கள் புதுவை மொழி மைய்யத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிய போது, பிரதமர் நேரு அவரைப் பார்த்து, ‘நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டதற்கு, பிள்ளை பதில் கூறும் நேரத்தில்,